Manikandaprabhu Ganesan

Inspirational Drama

5.0  

Manikandaprabhu Ganesan

Inspirational Drama

T

T

3 mins
614


"T"


இத்தனை வருடங்கள் , பல கடுமையான சூழ்நிலைகளையும் , பொருளாதார நெருக்கடியையும்தாண்டி , கல்லூரியில் , தனது துறையில் , இரண்டாவதாக வந்த அவன் , பல கனவுகளுடன், தனது புகைப்படத்தினை ஒட்டி, resume-னை உருவாக்கி , பல்வேறு நிறுவனங்களுக்கு , அதனை அனுப்பி வைத்தான் . ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் , தனது மெயில் இன்பாக்சில் , பதில் வரும் என எண்ணி , பார்த்து கொண்டே இருப்பான். சில வாரங்கள் ஓடின . ஆனால் , அவனுக்கு ஏமாற்றமே வந்தது . தன்னை விட குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் கூட எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது , சென்னை சென்று, வேலை பெற்று வந்ததை எண்ணி மனம் நோக ஆரம்பித்தான் . ஒரு புறம், கல்விக்கு வாங்கிய கடனுக்கு வட்டி ஏற ஆரம்பித்தது . மறுபுறம் , நிறுவனங்கள் , தன்னை புறக்கணிப்பதை எண்ணி , மன அழுத்தம் அதிகம் ஆகத் தொடங்கியது . திடிரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது . உடனே , அருகில் இருக்கும் , பிரௌசிங் centre க்கு சென்று , Successful resume template என டைப் செய்து , அதை download செய்து ,தனது resume – ஐ மாற்றி அமைத்தான் . புதிய resume , அவனுக்கு புதிய நம்பிகையை தந்தது .ஆனால், புதிய resume – இல் ,அவனது புகைப்படத்தை இணைப்பதருக்கு இடம் இல்லை . இருப்பினும் , இம்முறை அதிக நம்பிக்கையுடன் , சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, தனது புதிய resume மை அனுப்பி, வீட்டிருக்கு சென்று நிம்மதியாக உறங்கினான்.


அடுத்த நாள் காலை , முதல் வேலையாக , அந்த பிரௌசிங் centre க்கு சென்றான். தனது மெயில்-ஐ லாகின் செய்தான் . அவனுக்கு பேரதிர்ச்சி . பத்துக்கும் மேற்ப்பட்ட நிறுவனகள் , அவனை , சென்னைக்கு , எழுத்து & நேர்முகதேர்விருக்கு வருமாறு அழைத்திருந்தன. கண்களில் கண்ணீருடன், தனது தாயிடம் கூறி, கையில் 2000 ரூபாயுடன் , சென்னைக்கு புறப்பட்டான் . முதல் நாள் அவனுக்கு மூன்று இடங்களில் தேர்வு நடைப்பெற்றது . மூன்றிலும் , எழுத்து தேர்வில் முதல் மாணவனாக வந்தான் . ஆனால் , நேர்முக தேர்வில் நிராகரிக்கப்பட்டான் . இது போலவே அடுத்த சில நாட்களில் , மற்ற நிறுவனங்களினாலும் நிராகரிக்கப்பட்டான். கையில் இவ்வளவு நாட்கள் இருந்த பணம் , இப்போது இல்லை . என்ன ஆனாலும் , வேலை கிடைக்காமல் இந்த ஊரை விட்டு போக கூடாது என்று எண்ணி , பகுதி நேரமாக சிறு கடைகளில் சென்று வேலை செய்து கொண்டே, வேலை தேடலாம் என எண்ணி , ஒவ்வொரு கடைகளிலும் ஏறி இறங்கினான் . ஆனால் , யாரும் அவனுக்கு வேலை தர முன் வரவில்லை .


விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவன் , கடும் மன உளைச்சலுடன் , அருகில் இருந்த ரயில் நிலையத்திருக்கு சென்றான். அங்கே , பித்து பிடித்தவன் போல ரயில் தண்டவாளத்தை பார்த்து கொண்டு இருந்தான் . நேரம் செல்ல செல்ல , ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகம் ஆகத் தொடங்கியது. இப்பொழுது , அவனது பார்வை , ரயில் நிலையத்திற்குள் வந்து போகும் ரயில் மேல் விழத் தொடங்கியது . தனது, மனதை கல்லாக்கி , ஒரு முடிவை எடுத்தான் . அடுத்த நொடியே , அதிவேகமாக, ரயில் நிலையத்திற்க்கு ஒரு ரயில் வருவதை பார்த்து எழுந்து நின்றான். வந்து நின்ற ரயிலில் ஏறினான்.ஏறிய சில நிமிடங்களில் , சிறிது தயக்கத்துடன், கையில் நடுக்கத்துடன் , “ sir. உங்களால முடிஞ்ச உதவிய தயவு செஞ்சு எனக்காக பண்ணுங்க “ என சொல்லி , கண்ணீருடன் , பிச்சை எடுக்க ஆரம்பித்தான். காலையில் வேலை தேடி அலைவதும் , மாலையில் , ரயிலில் ஏறி பிச்சை எடுப்பதையும் வழக்கம் ஆக்கினான் .


அன்று ஒரு நாள் , வழக்கம் போல ரயிலில் பிச்சை எடுக்கும் போது , வெள்ளை உடை அணிந்த, பெரிய மனிதர் ஒருவர் , கோபத்தில் “ உனக்கு உடம்பு தான் நல்லா இருக்குல . உழைச்சு சாப்புட வேண்டியது தான.” .. எனத் தொடங்கி பலவாறு , அவனை திட்ட ஆரம்பித்தார். இதை கேட்க முடியாமல் அவன் அழுது கொண்டே ,” சும்மா இருங்க சார் . யார் யார் சொன்னா ? நா வேல தேடலனே . நா தான் எங்க department லயே 2nd rank. ஒரு டீ கடைல கூட என்னைய வேலைக்கு சேத்துக்க மாட்ராங்க. இவ்வளவு என்னைய திட்டுறிங்கள , நா என்னோட resume –அ உங்கட்ட குடுக்குறேன் . ஒரு வேல வாங்கி தருவிங்களா ? உங்களால முடிஞ்சா என்ன மாதிரி ஆளுங்கள encourage பண்ணுங்க.” என கூறிவிட்டு, மனதில் வலியுடன் , அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி சென்று கொண்டு இருந்தான் . இன்றுடன் , அவன் அவளாக மாறி பத்து ஆண்டுகள் நிறைவேறியது .


இந்தியாவில் கிட்டதட்ட, 4,90,000 திருநங்கைகள் உள்ளனர் . திருநங்கைகளின் கல்வியறிவு சதவிகிதமும் மிக குறைவு. நன்றாக படிக்கும் திருநங்கைகளுக்கும் வேலை வாய்ப்பு நிராகரிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது . என்று நாம் , பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தில் Gender என கேட்கப்படும் இடங்களில் , M ( Male ) F ( Female ) T ( Transgender) என option கொடுக்கப்படுமோ , அன்றே அவர்களுக்கு விடிவு காலம் ... இக் கதையினை படிக்கும் நீங்கள் , பின் நாட்களில் , நிறுவனங்களை தொடங்கலாம் அல்லது உயர் பதவியில் இருக்கலாம் . அந்நேரங்களில் , ஒரு திருநங்கைகாவது . அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வேலை கொடுங்கள். அவர்களும் நம்மை போன்ற சக மனிதர்கள் தானே


P.S : அடுத்த முறை , நீங்கள் திருநங்கைகளை ரயிலில் பார்த்தால் , உங்களால் முடிந்த உதவியை செய்ய மறவாதீர்கள்.Rate this content
Log in

More tamil story from Manikandaprabhu Ganesan

Similar tamil story from Inspirational