Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

Manikandaprabhu Ganesan

Drama Crime

5.0  

Manikandaprabhu Ganesan

Drama Crime

என்னை நோக்கி பாயும் தோட்டா..

என்னை நோக்கி பாயும் தோட்டா..

3 mins
421


இரவு சரியாக 11.45 மணிக்கு ,பறக்கும் இரயில் அவனை கஸ்துரிபாய் நகர் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு , பறந்து சென்றது . அதுவரை , தையிரயமாக தனது மொபைல் ஹெட் போனில் பாட்டு கேட்டு வந்தவன், ரயில் நிலையத்தில் இறங்கியதும் , பாட்டு கேட்பதை நிறுத்தி விட்டான். அங்கு நிலவிய நிசப்தம் அவனை பீதியடைய செய்தது. அந்த திகில் கலந்த இரவில் , அங்கே அவனும் அவன் தலை மேல் பறந்து கொண்டு இருந்த ஆயிரம் கொசுக்களை தவிர வேறு யாரும் இல்லை . அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது , அவனது செருப்பினால் உண்டான சப்தம் அவனது பயத்தை மேலும் அதிகரித்தது .


வேகமாக நடந்து சென்று , அங்கு இருந்த, ஓடாத எஸ்கலேட்டரில் கால் வைத்து இறங்கி கொண்டு இருக்கும் போது , படியில் இருந்த துண்டு பீடி , சிகரெட் மற்றும் உடைந்த பிராந்தி பாட்டில்கள் , அந்த இடம் ,சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடம் என அவனுக்கு உணர்த்தியது . இரண்டாவது தளத்தில் இருந்து இறங்கி ,முதல் தளத்தில் சென்று கொண்டு இருக்கும் போது , அங்கு இருந்த கட்டிட விரிசலில் இருந்து சொட் சொட் என ஒழுகி கொண்டு இருந்த தண்ணீரின் ஒலி , அவனது இதய துடிப்பை அதிகபடுத்தியது. தரை தளத்தை அடைந்து வெளியேறும் போது , அவனது மொபைல் பேட்டரி இன்டிகேட்டர் சிவப்பு நிறத்துக்கு மாறி , 4% கீழாக சார்ஜ் உள்ளது என மொபைல் எச்சரிக்கை செய்தது . கையில் வியர்வையினால் வந்த ஈரத்துடன் மொபைலை இறுக பிடித்துகொண்டு , ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தான் . எப்போதும் ஆரவாரமாக இருக்கும் OMR ரோடு , அந்த இரவில் , சோடியம் லைட்டின் இள மஞ்சள் நிறத்தில் , பனி மூட்டத்துடன் , யாரும் கேட்பாரற்று இருந்தது . PTC இல் உள்ள தனது வீட்டுக்கு எப்படியாவது , ஆட்டோ பிடித்து உடனே செல்ல எண்ணி , ஆட்டோவிற்காக காத்து கொண்டு இருந்தான் . பத்து நிமிடங்கள் ( அவனுக்கு 600 வினாடிகள் ) கடந்து சென்றன .


மொபைலில் பேட்டரி சார்ஜ் லெவல் 2%-ஆக குறைந்தது. கண் இமைக்காமல் , சாலையின் ஒரு புறம் , ஆட்டோவை எதிர்பார்த்து இருந்த போது , துரத்தில் ஒருவர் ஓடி வருவது போல் இருந்தது . அடுத்த சில விநாடிகளிலே, ஓடி வந்தவனுக்கு பின்னால் ஒரு ஆட்டோ வந்தது . சில நிமிடங்களில் , ஓடி வந்தவன் , இவனுக்கு சற்று தொலைவில் , மூச்சு வாங்கி விழுந்தான் . கீழே விழுந்தவனுக்கு உதவலாம் என இவன் எண்ணி , ஒரு அடி எடுத்து வைக்கும் முன், பின்னால் வேகமாக வந்த ஆட்டோ, முரட்டுதனத்துடன் ப்ரேக் போடப்பட்டு , கீழே விழுந்தவன் அருகில் நின்றது . அந்த ஆட்டோவில் இருந்து நான்கு பேர் உருட்டு கட்டையுடன் வந்து இறங்கி , கீழே விழுந்தவனை , உருட்டு கட்டையால் தாக்க ஆரம்பித்தனர் . அவர்களின் அடியை தாங்க முடியாமல் , “ ஐயோ , தயவு செஞ்சு யாராவது என் உயிரை காப்பற்றுங்கள் “ என கீழே விழுந்தவன் அலற ஆரம்பித்தான் . இவன் போலீசுக்கு தகவல் தரலாம் என மொபைலை ,லாக் பேட்டர்ன் போட்டு அன்லாக் செய்து,100-க்கு கால் செய்து , ரிங் போய் கொண்டிருக்கும் சமயத்தில் மொபைல் சார்ஜ் இல்லாமல் , சுவிட்ச் ஆப் ஆனது . அங்கு இருந்து ஓடி விடலாமா என அவன் எண்ணி கொண்டு இருக்கும் வேளையில்,பலத்த அலறல் சப்தத்துடன் சைரன் வைத்த போலீஸ் வண்டி புயல் வேகத்தில் வந்து , ஆட்டோவுக்கு சற்று தொலைவில் வந்து நின்றது .


நின்றவுடன், அதில் இருந்து நான்கு காவலர்கள் பாய்ந்து , அந்த நான்கு ரௌடிகளை சுற்றி வளைத்து ,துப்பாக்கியை அவர்களின் நெற்றிக்கு குறி பார்த்து வைத்தனர்.இதை சற்று தொலைவில் பார்த்து கொண்டு இருந்த இவனுக்கு , ஒரு வேளை தானும் இந்த ரௌடி கும்பலை சேர்ந்தவன் என போலீசார் நினைத்தால் என்ன ஆகும் என எண்ணி கொண்டிருந்த சமயத்தில் ,நான்கு துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்த நான்கு தோட்டாக்கள் அந்த நான்கு ரௌடிகளை சாய்த்தது .அடுத்த நொடியே , இவன் தன்னை யாரும் சுட்டு விடாதிர்கள் என்பதை தெரிவுக்கும் வகையில் , இரு கைகளையும் மேலே தூக்கி, ஹான்ட்ஸ் அப் நிலையில் நின்று கொண்டிருந்த சமயத்தில், அந்த ஆட்டோவில் இருந்து மேலும் இருவர் இறங்கினர் . ஒருவர் கையில் , தாள்களுடனும் , மற்றொருவர் கையில் கேமராவுடன் இருந்தனர் . இருவரும் சேர்ந்து “ செம . வெறித்தனமா இந்த சீன் வந்து இருக்கு . நம்ம படத்துலையே இந்த சீன் தான் பெரிய ட்விஸ்ட் சீன் ” என கூறினர்.


இரவு வேளையில், தங்களது படத்தில் வரும் ஒரு என்கவுண்டர் காட்சியை , ஆட்டோவின் உள்ளே கேமரா வைத்து இயக்குனர் படம் பிடித்து கொண்டு இருந்த போது , ஆட்டோவிற்காக காத்து கொண்டு இருந்த ஒருவர் , உண்மையான கொலை நடக்கிறது என எண்ணி பயந்த கதை .


Rate this content
Log in

More tamil story from Manikandaprabhu Ganesan

Similar tamil story from Drama