மாத்தி யோசி - சில வரி சிறுகதை
மாத்தி யோசி - சில வரி சிறுகதை


செல்வத்தின் பைக்கை ரோஷன் கை காட்டி நிறுத்தினான். 'சுக்ரியா சாப், உங்க பையனால தான் இப்போ பிசினஸ் நல்லா நடக்குது'. ரோஷன் மரத்தடியில் மணிபர்ஸ், பெல்ட் போன்ற பொருட்களை விற்றுக்கொண்டிருப்பவன். பனிரெண்டாவது முடித்திருக்கும் மகன் அருண் அடுத்து பொறியியல் தான் படிக்கவேண்டும் என்று செல்வம் சொல்லிவிட்டார்.
அருண் வெளியே கிளம்பிக்கொண்டிருந்தான்.
'நில்லுடா, அந்த இந்தி பையன் ஏன் என்னை நிறுத்தி தேங்க்ஸ் சொல்றான்'.
'ரோடோரத்துல வச்சிருக்கறதால, நிறைய பேர் தங்களை ஏமாத்திருவாங்களோ அல்லது விலை அதிகமா இருக்குமோன்னு தயங்கிக்கிட்டே போய்டுவாங்க, அதோட, ஆளுக்கேத்த மாதிரி விலை சொல்வாங்களோன்னு யோசிப்பாங்க. அதனால ஒரு போர்டுல விலை எல்லாம் எழுதி எல்லாருக்கும் தெரியறமாதிரி மாட்டச்சொன்னேன், இப்போ அவன் பொருள் எல்லாம் நல்லா விக்குதுப்பா.'
பெருமையுடன் மகனை பார்த்துவிட்டு சொன்னார். 'உனக்கு பிடிச்ச பி.காம் படிப்பிலேயே சேர்ந்துக்கோ'.