பயமாக இருக்கிறது.
பயமாக இருக்கிறது.


பயமாக இருக்கிறது.
என் தோழியின் அண்ணனின் உண்மையான கதை இது.
அவரது இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது .
வார்த்தைகளால் சொல்லி மாளாது.
உணர்ச்சி பூர்வமானது.
நல்ல ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர்.
ஆறு சகோதர சகோதரிகளுடன் வாழ்க்கையை நடத்தினார்.அன்பான அம்மா அப்பா.
அழகான மனைவி.
அன்பே உருவான மனைவி .
கணவன் மற்றும் குடும்பத்தார் மனநலம் கோணாமல் வாழ்ந்து வரும் உத்தமி அவள்.
ஆனால் அவர் நிலையோ இன்று பரிதாபகரமானது.
75 வயது ஆகிறது.
தமிழ்நாடு அரசில் நல்ல உத்தியோகம் வகித்தார் ராமன்.
கை நிறைய சம்பளம்.
தன் உடன்பிறந்தோருக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்.g dr
கேட்டதெல்லாம் வாங்கித் தருவார்.
எல்லோரும் அவரை அண்ணா அண்ணா என்று பாசத்துடன்கூப்பிடுவார்கள்.
ஆனால் பல வருடங்களுக்கு முன்பே அவர் தந்தையார் காலமாகிவிட்டார்.
தாயார் காலமாகி சில வருடங்கள் ஆகிறது.
தாய்க்கு முன்பாகவே தாரமும் இறந்துவிட்டார்கள்.
அவருக்கு குழந்தைகள் கிடையாது.
இந்த நிலையில் ஆதாரமும் இல்லாமல், தாய் தந்தையும் இல்லாமல், தன் வாரிசு இல்லாமல், தனி கட்டையாய் இருக்கிறார் அவர்.
இந்நிலையில் தான் ஒரு முறைஅவர் காலில்ஏதோ குத்திவிட்டது.
அவை சரிவர பார்க்காமல் புண்ணாகி விட்டது.
பார்க்காமல் விட்ட குறை,அவரது மூத்த தங்கை அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அந்த மருத்துவமனையில் சரியாக பரிசோதனை செய்யாத மருத்துவர்கள் அவரை சர்க்கரை நோயாளி எனக்கருதி உள்ளங்கால் ஆப்பரேஷன் செய்திருக்கிறார்கள்.
ஆபரேஷன் செய்து அதை சரியாக பராமரிக்காமல் அதுவே பையனுக்கு புண்ணாகி சீழ் பிடித்து செப்டிக் ஆகி விட்டது.
பாவம் தனிமையில் என்ன செய்வார்? மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு தலையாட்டிக் கொண்டு அவர்கள் சொன்ன வண்ணமே இவரும் செய்திருக்கிறார்.
விளைவுதான் மிக மோசமாகி விட்டது.
சிறிது மாதங்களில். அடிப்பாதம் அழுகி ஒருவித துர்நாற்றம்வந்துவிட்டது.
அருகில் யாரும் செல்ல முடியாதபடி ஒரு வித அருவருக்கத் தக்க நாற்றம்.
பிறகு வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் .
இவரிடம்தான் பணம் கொட்டி இருக்கிறதே. மற்றவர்களுக்கு என்ன?
பணத்தை தண்ணீராய் செலவழித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் நிஜமாகவே இவருக்கு பயத்தில் சுகர் வந்து விட்டது .
சர்க்கரை நோயாளி ஆகி மாறிவிட்டார்.
பிறகு என்ன? நகரின் மிகப்பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய்.
மறுபடி எல்லாவிதமான மருத்துவ பரிசோதனைகள்,பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு.
ரூபாய் செலவு பற்றி கூட கவலை இல்லை. மனிதன் எத்தனை விதமான மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறான்.
பிறகு ஒரு ஊசி தினமும் 3000 ரூபாய்க்கு.
பிறகு அடி காலையே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி விட்டார்கள்.
கணுக்கால் வரை காலை வெட்டி எடுத்தார்கள்.
பிறகு சரிவர கவனிக்காமல் அழுகிக் கொண்டே வந்தது.
மறுபடியும் வேறொரு மருத்துவமனை.இப்போது முழங்கால் வரை காலை எடுத்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை.
பாவம் எத்தனை வேதனைகள், வலி,இந்த உணர்வு பூரணமான வேதனைகளுக்கு மருத்துவமே கிடையாது.
ஆறுதலே கிடையாது .
அன்பான வார்த்தைகள் ,அன்பான அரவணைப்பு, அன்பான உபசரிப்பு, இதைதான் அவற்றை போக்க இயலும். ஆனால் அப்படி ஒரு உண்மையான அன்புகிடைக்கவே இல்லை. அவருக்குபாவம். எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ?அவரை பராமரிப்பதற்கு ஆட்களை நியமித்தார்கள்.மாதம் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய தயாராக இருந்தார்.ஆனாலும் ஒருவரும் நிரந்தரமாக தங்கவில்லை. ஓடிக்கொண்டே இருந்தார்கள்.ரத்த பாசங்கள், சொந்தங்கள் என்றெல்லாம் நாம் சொல்கிறோம்.ஆனால் அவையெல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா? என்று அவரைப் பார்க்கும்போது எனக்கு சந்தேகம்தான்.பணம் காசு இருந்தபோது அவரை தாங்கியவர்கள் எல்லாம் இன்று ஒருவரும் திரும்பிப் பார்ப்பதில்லை.
கேட்டால் எங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா?
எங்களுக்கெல்லாம் கணவர் மனைவி பிள்ளை குட்டிகள் இல்லையா என்று வியாக்கியானம் சொல்கிறார்கள்.
மனித வாழ்க்கையே இவ்வளவுதானா?என்ன ஒரு கேவலமான பிழைப்பு. தனிக்காட்டு ராஜாவாக நடராஜா வாய் நடந்து கொண்டே இருப்பார்.
நடப்பதற்கு அஞ்சவே மாட்டார் .
இன்று பரிதாபமாக சேரில் முடங்கிக் கிடக்கிறார்.
இன்று உயிர்
நாற்காலிஎன்று ஒரே ரூமில் அடைபட்டுக் கிடக்கிறார்.
உண்மையில் ஒரு நரக வாழ்க்கை, நரக வேதனை,இதற்கு மரணமே தேவலை என்று தோன்றுகிறது. ஆனால் செய்த பாவத்தை நாம் கழிக்க வேண்டுமே.
அவர் நன்றாக இருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.
இன்று அவர் நாதியற்றுப் போனதையும் நினைத்து பார்க்கிறேன்.
இன்னும் பணத்தை அனைவருக்கும் தனியாய் வாரிச வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால் அவருக்கு தேவையான பொருட்கள் கிடைப்பது இல்லை.
கிடைப்பதை சாப்பிட்டு மகிழ்ச்சியாக வாழ முயற்சிக்கிறார் .முயற்சி
தான் செய்கிறார் .முயற்சி தான் செய்கிறார்.ஆனால் நிவர்த்தி கிடைக்கவில்லை.
தனித்தன்மையாக இயங்கியவர் இன்று எதற்குமே அடுத்தவரை நாட வேண்டிய நிலைமை .
டயப்பர் மாற்றிவிட வேண்டும். இவரது மூத்திரப்பையை சுத்தம் செய்ய வேண்டும். இவருக்கு டிரஸ் மாற்றி விட வேண்டும் என எதுவுமே முன்பின் அறிமுகம் இல்லாத, ,பழக்கம் இல்லாத வாழ்க்கையை இவர் வாழும் போது மனம் தாங்கவில்லை.
பார்க்கின்ற நமக்கே மனம் மிகவும் வேதனை இருக்கிறதே, அந்த வாழ்க்கையை வாழ்கின்ற அந்த மனிதருக்கு எப்படியிருக்கும்? என்று நினைத்துப் பார்க்கிறேன் .இதில் மற்றவர்கள் கூறுகிறார்கள் நான் அவரை போல பிள்ளை குட்டி இல்லாதவளா?
தனிமரம் ,வெத்து கட்டை,
அவருக்கு என்ன யாரும் கிடையாது. எங்களுக்கு அப்படி இல்லையே? என்று வேறு கூறுகிறார்கள்.அவர் மனசு என்ன பாடுபடும்.பலமுறை மற்றவர்கள் கூறும்போது சில முறையாவது காதில் விழாமல் போய்விடும்
சொந்தம் பந்தம் என்று நாம் திரிகிறது
உண்மை. உண்மையில் இதையெல்லாம் சொந்த பந்தங்களை உடன்பிறப்புகள் தானே? ரத்த சம்பந்தங்கள் தானே? ஒன்றாய் ஒரு தாய்ப்பால் குடித்து வளர்ந்த வர்கள்தானே? பாசம் எங்கே போனது? பரிவு எங்கே போனது?
குடும்பமே வேண்டாமடா சாமி என்று தோன்றுகிறது! இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றுகிறது!ஆம் வேறு என்ன செய்ய முடியும் ?கையாலாகாதவர்கள்.பணம் இருந்தும் என்ன உபயோகம்?
ஆரோக்கியம் தாண்டா வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டேன்.நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.