gokul k

Abstract Romance Classics

3.9  

gokul k

Abstract Romance Classics

பொங்கும் நினைவுகள்

பொங்கும் நினைவுகள்

1 min
365


கடற்கரை என்ற வார்த்தையை எப்பொழுதெல்லாம் என் செவியில் ஒலிக்கிறதோ அப்பொழுதெல்லாம் என் மனம் இந்நிகழ்ச்சியைக் நினைத்து புன்னகை ஆகும்.


காலத்தின் ஓட்டம் குதிரையின் ஓட்டத்தை ஞாபகப்படுத்தியது.

ஒரு முறை எனக்கு 3 வயது இருக்கும். குடும்பத்துடன் மெரீனா சென்றோம். கடைகள் மற்றும் அலைகள் இருந்தாலும் எனக்கோ நாலுகால் பாய்ச்சலில் ஓடும் குதிரை மீது தான் கண்.  


அதற்கு ஏற்றார் போல் குதிரையை எங்கள் அருகிலேயே நிறுத்தி எனது ஆசையை அதிகமாக்கினர். எனக்கு குதிரையை விட்டு செல்வதில் அவ்வளவு விருப்பமில்லை.  

எனது வாடிய முகம் மலர பெற்றோர் சிறிது தூரம் சென்றுவர அனுமதித்தனர்.


சிறிது நேரம் ஆகியும் நாங்கள் திரும்ப வில்லை என்பதால் பெற்றோர் அங்குமிங்கும் பதறி பயத்தில் என்னையும் குதிரையும் தேடினர். பிறகு நாங்கள் கரை திரும்பிய போது அவர்களின் கண்ணில் கடல் அலை பொங்கி எழுந்தது. எங்களின் வருகைக்காக அனைவரும் கரையில் மீன் காயும் போல் இருந்தனர். 


அந்த சாரதியை சிலபேர் திட்ட ஆரம்பிக்க, என் பெற்றோர்களும் என்ன என்று விசாரிக்க ,

அவர் தொடங்கினார் ” சிறிது தூரம் சென்ற பின் நான் குதிரையை திருப்ப... அவனோ கண்ணீர் சிந்த என் மனம் இத்திசை திரும்பாமல் அவனின் திசைக்கு திரும்பியது “.

“அதனால் தொலைதூரம் சென்று அவனின் கடலைப் போல் பரந்து விரிந்த மனதில் வானின் நிலா வை கண்டபிறகு என்னால் இத்திசை வர முயன்றது” என கூறினார்.

இன்றோ எனக்கு அவரின் முகம் ஞாபகம் இல்லை எனினும் அவர் எந்நாளும் நீடூழி வாழ வேண்டும் என அதே மனம் ஆசைப்படுகிறது.

அன்று அவர் நீர் ஊட்டி வளர்த்த ஆசை இன்றும் அடங்கவில்லை.


இன்றும் கடற்கரைக்குச் சென்றால் எனது இரு விழிகளும் அவரை வலைவீசித் தேடும்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract