பிறந்தநாள்
பிறந்தநாள்


எனது ஒரே அன்பு மகனின் பிறந்த நாள் .
ஒவ்வொரு வருடமும் அவன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுவோம் .
ஆனால் வாழ்க்கையில் இது தான் முதல் தடவை .
கொண்டாட முடியாத நிலைமை.
வெளியே கடைகளுக்குச் செல்ல முடியாது.
கடையில் நம்பி ஒரு பொருளையும் வாங்க முடியாது.
கேக் வாங்க முடியாது .சாக்லேட் வாங்க முடியாது .
ஐஸ்கிரீம் வாங்க முடியாது .ஓட்டலுக்கு செல்ல முடியாது. இப்படி எல்லாமே முடியாது, கிடையாது ,என்று இருக்கும் நிலையில் மனம் மிகவும் வேதனைப்பட்டது.
ஏன் கடவுளே இந்த சோதனை என்று.
ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அஷ்டலட்சுமி கோவில் , அனைவரும் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கும் சென்றுஅர்ச்சனை செய்து கடவுளை மனதார பிரார்த்திப்பது வழக்கம் .
இந்த வருடம் கோயிலுக்கும் செல்லவில்லை. வீட்டுக்கு செல்லவில்லை ஐஸ்கிரீம் பார்லர் ,ஹோட்டல் எங்குமே செல்லவில்லை.
பையன் என்னவோ அதை பொருட்படுத்தவில்லை .
பெற்றோர்களாகிய நாங்கள் தான் மிகவும் மனம் வருந்தி மிகவும் வேதனைப்பட்டது.
வீட்டிலேயே மனமார இறைவனை மனமுருக பிரார்த்தித்து வேண்டிக்கொண்டோம் .உலகத்திற்கே நல்ல அமைதியையும் ஆனந்தத்தையும் கொடு இறைவா .
ஏன் இந்த பயம். உலக மக்களிடையே. இதை நீ ஒரு நொடியில் தீர்த்து விடலாம் அல்லவா ?எங்கள் பாவங்களை மன்னித்து விடு இறைவா என்று வேண்டிக் கொண்டோம்.