நம்பிக்கை
நம்பிக்கை


ஒரு ஊரில் மக்கள் மழை இன்றி தவித்தனர். நீண்ட நாட்களாக மழை பெய்யவில்லை. எனவே பயிர்கள் எல்லாம் வாடி வதங்கியது. எனவே எல்லோரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.
அதனால் மழை பெய்யும் என்று நம்பிக்கையுடன் ஒரு கோவில் மண்டபத்தில் கூட்டம் கூடி கூட்டு பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
அப்போது ஒரு பையன் மட்டும் கையில் குடையுடன் வந்தான்.
வந்திருந்த பெரிய மனிதர்கள் யாவரும்
குடை கொண்டு வரவில்லை.
ஆனால் சின்ன பையன் மட்டும் குடையுடன் வந்தான்.
ஏனென்றால் அவனுக்கு நம்பிக்கை. இந்த கூட்டுப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்த பிரார்த்தனை முடிந்தவுடன் மழை சோவென்று கொட்டும்.
எனவே மழையில் நனைந்து எவ்வாறு வீட்டிற்கு திரும்புவது.
அதனால் அவன் குடை கொண்டு வந்தான். அதுதான் நம்பிக்கை.
வாழ்க்கையில் நம்பிக்கை மிக முக்கியம். அதுவும் கடவுள் மீது நம்பிக்கை என்பது மிக மிக முக்கியம் மனிதர்களுக்கு.