Arul Prakash

Comedy

4  

Arul Prakash

Comedy

நான் பெத்த ஷெர்லாக் ஹோம்ஸ்

நான் பெத்த ஷெர்லாக் ஹோம்ஸ்

3 mins
695



ரகு வயசு 40, ரகுவின் மனைவி ரம்யா வயசு 35, இவர்களின் பிள்ளை ராம் வயசு 11.


ரகு வீட்டு கதவ திறக்குறான், வாசல்லேயே ரம்யா அவர தடுக்குறா.


ரம்யா : எங்க இந்த பக்கம் 


ரகு : நம்ம வீட்டுக்கு தான் டி.


ரம்யா : ஆமா திரும்பவும் எதோ பொண்ணுகூட போன்ல பேசுறீங்கலாமே.


ரகு : நீ பெத்து வச்சு இருக்கியே, ஒரு தவ புதல்வன், அவன் சொன்னானா.


ரகு பையன் எட்டி பாக்குறான்.


ரம்யா : அவன் சொல்லி இல்ல, ஏன் எனக்கு அறிவு இல்லையா.


ரகு : ஏன் இல்ல உனக்கு தான் நிறையவே இருக்கே.


ரகு சோபால வந்து உட்கார்ந்துடுறாரு


ரம்யா : உங்க போன நான் பாத்தேன், நிறையா பொண்ணு கூட chat பண்ணி இருந்திங்க.


ரகு : ஏண்டி நிறைய பொண்ணுங்க முதல என் கிட்ட பேசாதிடி, நான் என்ன மன்மதனா.



ரம்யா : உங்க அழகு உங்களுக்கு தெரியாது.


ரகு : இப்ப என்ன புகழ்ந்து பேசுறியா, இல்ல சந்தேகம் படுறியா.


ரம்யா : உங்கள போய் சந்தேக படுவேனா.


ரகு : அப்பாடா.


ரம்யா : confirm ah சொல்றேன்.


ரகு : மறுபடியும் ஆரமிச்சுட்டா. சரி என்ன கேஸ் அத சொல்லு முதல.


ரம்யா : நீங்க நிறய கேஸ்ல மாட்டி இருக்கீங்க.


ரகு : ஒன்னு ஒண்ணா கேளு.


ரம்யா : நீங்க ஒரு பொண்ணு கூட போன்ல பேசிகிட்டு இருந்திங்க, அத நம்ம பையன் ராம் பாத்து இருக்கான்.


ரகு : எந்த டைம்.


ரம்யா : ஓ ஒவ்வொரு டைம் ல ஒவ்வொரு பொண்ணு கிட்ட பேசிட்டு இருந்திங்க.


ரகு : நீ ரொம்பவே ஓவரா போறடி, உன் பையன் பேச்சை கேட்டு.


ரம்யா :குழந்தைங்க பொய் சொல்லாது.


ரகு : கரெக்ட்,குழந்தைங்க பொய் சொல்லாது, நீ பெத்து வச்சிருக்க எரும மாடு சொல்லும்.


ரம்யா : நேத்து 6 மணிக்கு ஒரு பொண்ணு கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்து இருக்கீங்க, யாரு அது.


ரகு : அது உன் தங்கச்சி மீரா டி.


ரம்யா : ஐயோ கடவுளே என் தங்கச்சியா.


ரகு : இதுக்கு எதுக்கு கடவுள கூப்பிடுற.


ரம்யா : நீங்க அப்போ ஏன் அவ கூப்பிடத, என் கிட்ட சொல்லல.


ரகு : அவ என் friend ரமேஷ் ah love பண்றா.


ரம்யா : ஐயோ அவனதான் என் குடும்பத்துக்கே பிடிக்காதே.


ரகு : அதுனால தான் என் கிட்ட உங்க வீட்டுல வந்து பேச சொல்லி, கேட்டு இருந்தா.


ரம்யா : அப்படியா, சரி சரி. அப்போ பைக்ல ஒரு பொம்பள கூட போனது.


ரகு : இதையும் நம்ம வீட்டு ஸ்பை, உன் பையன் தான் சொன்னதா.


ரம்யா : அவன் அம்மா வாழ்க்கை மேல இருக்க அக்கறைல வந்து சொல்றான்.


ரகு : அதெல்லாம் காரணம் இல்ல ரெண்டு நாள் முன்னாடி உன் பையன் play station கேட்டான், நான் வாங்கி தரமாட்டேன் சொன்ன, அதுனால பையன் உன்கிட்ட வந்து உண்மையா சொல்லி இருக்கான்.


ரம்யா : நீங்க முதல யாரு அந்த பொண்ணுனு சொல்லுங்க.


ரகு : என் ஆபீஸ் மேனேஜர் டி.


ரம்யா : ஆபீஸ் மேனேஜர் கூட தொடர்பா.


ரகு : ஹே ஹே எனக்கு அந்த பொம்பள னாலே பயம், தொடர்பு வேறயா, அவளுக்கு 50 வயசு டி.


ரம்யா : அப்பறம் ஏன் பைக்ல கூட்டிட்டு போன்னிங்க.


ரகு : அவங்க கார் ரிப்பேர், அது தான் நான் கூட்டிட்டு போது விட்டுட்டு வந்தேன்.


ரம்யா : ஓ.


ரகு : இப்பயாச்சு என்ன நம்புறியா.


ரம்யா : நம்புறேன்.


ரம்யா எந்துச்சு காபி போட போயிட்டா. ரகு மெதுவா தனுக்கு தானே பேசிட்டு இருக்கான்.


ரகு : நல்லா வேல நம்ம காலேஜ் friend ஒருத்தி கூட affair இருக்கறது அவ கண்டுபிடிக்கல.



ரகு to ராம் : என் மகனே, Mr. sherlock holmes இங்க வாங்க.


ராம் : என்ன பா.


ரகு : உனக்கு play station வாங்கி தரலைனு தான போட்டு தந்த, உனக்கு ஜென்மத்துக்கு அது கிடையாது.


ராம் : நீ வாங்கி தருவ பா.


ரகு : எப்படி.


ராம் : இப்ப தான நீ உன் காலேஜ் friend கூட affair இருக்குனு mind வாய்ஸ் னு நினைச்சு ஒளறிக்கிட்டு இருந்த, அத அம்மா கிட்ட சொல்வேன்.


ரகு : டேய் சொல்லிடாத டா கண்டிப்பா உனக்கு வாங்கி தந்துடுறேன்.


ராம் : ஓகே உனக்கு நிறைய affair இருக்கணும், அப்போ தான் நான் கேட்டது எல்லாம் நீ வாங்கி தருவ.


ரகு : உனக்கு உன்ன மாதிரியே ஒரு புள்ள பிறக்கணும் டா, அது என் சாபம்.


ராம் : உனக்கு நான் பொறந்த மாதிரியே.



Rate this content
Log in

Similar tamil story from Comedy