Tamil Gurusamy

Drama Inspirational Others

5.0  

Tamil Gurusamy

Drama Inspirational Others

மிட்டாய் தாத்தாவும் கொரோனாவும்

மிட்டாய் தாத்தாவும் கொரோனாவும்

3 mins
146


நேரம் மதியம் 1.15. 

கயல்விழி அலுவலகம் விட்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள்.

வெயில் மண்டையை பிளந்தது. கொரோன ஊரடங்கால் அலுவலகத்தில் பகுதி நேரமே வேலை.


பேருந்து நிலையம் வந்ததும் மிட்டாய் தாத்தாவை தேட ஆரம்பித்தாள் . 

முன்னர் மாலை நேரத்தில் பேருந்துக்கு 

காத்திருக்கும் பொழுது மிட்டாய் தாத்தாவை தினமும் காண்பது வழக்கம். பேருந்து பற்றிய தகவல் அதிகம் இவருக்கே அத்துப்படி...


இடுங்கிய கண்கள் பார்வையில் கனிவு 

உலர்ந்த உதடுகளில் மாறாத புன்னகை 

மடித்துவிட்ட முழுக்கை சட்டை 

தூக்கி கட்டிய வேட்டி,. கழுத்தை சுற்றிய துண்டு 

இடக்கையில் பெரிய பிளாஸ்டிக் பை முழுவதும் பாப்கார்ன் , கமரக்கட்டு , கடலை மிட்டாய்.. கயல்விழி க்கு தாத்தா தரும் கமர்கட் போல் சுவை எங்கும் கிடையாது என்பாள்...


இந்த தளர்ந்த வயதிலும் என்ன ஒரு உழைப்பு என்று அதிசயிப்பர் ... இரவு நேரங்களில் பேருந்து கிடைக்காமல் எந்த பெண்ணாவது தனித்து நின்றால் ஏதெனும் மூலையில் நின்றபடி காவல் இருப்பார்.. பேருந்து கிடைத்த பிறகே புறப்படுவார் . பேசி அறிமுகம் இல்லை என்றாலும் அங்கு தினசரி வரும் பெண்களுக்கு தாத்தா மீது மரியாதை அதிகம் அதிலும் கயலுக்கு அன்பும் கூட.. தாத்தா பாட்டி யோடு சிறு வயதில் வாசம் செய்யும் வாய்ப்பு அமையவில்லை அதனாலோ என்னவோ இவர் மீது ஒரு பற்று..


ஊரடங்கு நேரத்தில் இது போல் அன்றாட தொழில் நம்பி உள்ளோர் சாப்பாடுக்கு என்ன செய்வார் என்று யோசிப்பதுண்டு ஆனாலும் தாத்தா போன்றோர் வீடும் தெரியாது விசாரிக்கவும் யாரையும் தெரியாது என்று கடவுளிடம் அனைவர்க்கும் சேர்த்து வேண்டி கொள்வதோடு சரி.. வாய்ப்பு கிடைக்கும் போது தன்னால் முடிந்ததை செய்ய உறுதி கொண்டாள்

பேருந்து நிலையத்தில் தேட ஆரம்பித்தாள் எங்கும் காணவில்லை ஒரு வேளை வெயில் தாங்காமல் எங்காவது அமர்ந்து இருக்கலாம் என்று தேடினாலும் ஏமாற்றமே மிஞ்சியது.


அருகில் இருந்த கடைகளில் விசாரித்த பொழுதும் யாருக்கும் தெரியவில்லை 

என்ன அக்கா யார தேடுறீங்க என்றான் தாத்தாவுடன் சேர்ந்து சோளம் விற்கும் சிறுவன். 

யாரு மிட்டாய் தாத்தா வா ரெண்டு நாளா உடம்பு சரி இல்லாம இருக்காரு , இருமினா அக்கம் பக்கம் திட்டுறாங்கனு வருத்தப்பட்டுச்சி ஆயா நேத்து.. 


கடவுளே அப்படி ஏதும் இருக்க கூடாது என்று தெரிந்த தெரியாத எல்லா கடவுளிடமும் வேண்டி கொண்டே தாத்தா வீடு நோக்கி நடந்தாள்.

அருகில் மூடி கொண்டு இருந்த கடைகளில் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வேக நடையை போட்டாள்

குடிசை வாசலை அடைந்த நேரத்தில் உள்ளே 

பேச்சு குரல் கேட்டது..


"நீ நான் சொல்றத கேளு, என்னை விட்டுட்டு நீ பெரியவன் வீட்டுக்கு போய் இரு, நான் குணமானதும் வந்து கூப்டுக்கறேன்.. இங்க சாப்பாடு தண்ணி இல்லாம எத்தனை நாள் இருக்க முடியும்..இங்க நமக்கு வியாதி இல்லை னு டாக்டர் சொன்னா கூட நம்ப மாட்டேங்குறாங்க, வேலைக்கும் போக முடில".. --தாத்தா 

"இந்த பாரு யா எனக்கு இப்படி இருந்தா நீ போவியா சும்மா என்னை போய் இருனு சொல்லிட்டு இருக்க, இப்படியே சோறு தண்ணி இல்லாம செத்தாலும் ரெண்டு பேரும் ஒண்ணா சாவோம்.. நீ இரும்பிட்டு இருக்க னு பசங்க யாரும் சேர்க்க ல அங்க எனக்கு என்னை யா வேலை".. - ஆயா 


கதவை தட்டினாள். அறுபதுகளை தாண்டிய பேரிளம் பெண் தளர்ந்த நாடி கொண்டவர் திறந்தார். முகமே சோர்வாக சாப்பிட்டு நாட்கள் ஆனது என காட்டியது .. யார் மா நீங்க என்பது போல் பார்க்க , மனதிற்குள் யாரும் அதிகாரியா எதுவும் கேட்க வந்துட்டாங்களா, அதான் வைரஸ் இல்லை னு சொல்லிட்டாங்களே இந்த பின்னாடி வீட்டுக்கு வந்தவங்க போட்டு கொடுத்த வேலையா இருக்குமோ?...

"தெரிஞ்ச அக்கா தா ஆயா நம்ம தாத்தா பார்க்கணும் னு வந்து இருக்காங்க, 

நான் போயிட்டு வரேன் அக்கா "- சிறுவன்


"உள்ள வா மா, அதே இரும்பிட்டு இருக்குனு பசங்க கூட பார்க்க வரல எப்படி இருக்கீங்க னு கேட்கல நீ பார்க்க வந்து இருக்க". என்றார் ஆற்றாமையோடு

"டாக்டர்ட கூட்டு போனீங்களா"


"நேத்து தான் கூட்டிட்டு போனேன், பஸ் ஸ்டாப் லயே வேலைய பார்த்ததால் டஸ்ட் பிடிச்சிடுச்சி , மருந்த மாத்திரை வாங்க சொன்னார்"..

"சாப்பாட்டுக்கே வழி இல்லை இதுல மருந்து எங்க".,  என்று வருத்தம் தொடங்க, 

பழைய நார் கட்டிலில் சுருண்டு கிடந்த தாத்தா குரல் கொடுத்தார்.

'நீ எப்போவும் போடுற கஷாயம் போட்டு கொடு அதே போதும், நீ வா தாயீ அவளுக்கு வேலை இல்லை எதனா சொல்லிட்டு இருக்கும்" என்றவர் 

"வராத பிள்ள வந்து இருக்கு, நம்மள பார்க்க அதுக்கு குடிக்க கொண்டு வா" என்றார் கயலை பார்த்து சிரித்த படி. . 


தாத்தா முகம் சற்று மங்கி இருந்தது , கண்களில் தீட்சண்யம் குறையவில்லை... 

"நீங்க எப்படி இருக்கீங்க தாத்தா " - கயல்

"எனக்கு ஒரு குறையும் இல்லை தாயீ, நீ என்னை தேடியா இவ்ளோ தூரம் வந்த அதே சந்தோசம்மா இருக்கு" என்றார் கண்கள் மின்ன.. 

"இந்த கிழவி தான் பசங்க வரல னு புலம்பிட்டு இருக்கா 

என்னை நம்பி வந்துட்டு இப்போ சாப்பிடாம கிடக்குறாளே னு அடிச்சிக்கிட்டு எனக்கு".. 


"தள்ளு வண்டி ல காய்கறி விற்க பார்த்தா மேலுக்கு முடில .. இது என்ன மா வியாதி எந்த டாக்டர்ம் பார்க்க மாட்டேங்குறாங்க , அக்கம் பக்கம் இங்க இருக்க கூடாது போங்க னு சொல்றாங்க , கொரோனாவ விட வயோதிகம் பாத்து நோய் பரவிடும்னு ஒதுக்குவது தான் பெரிய வியாதி. வயசானவங்க இரும்புறாங்க னு ஒதுக்கி வைக்குறாங்க, நாங்க மத்தவங்க பத்தி யோசிக்கிற மாதிரி எங்கள பத்தி யோசிக்க யாரும் இல்லை யே நினைக்கிறப்போ நீ வந்து நிற்கிற, அது போதும் தாயீ".. --தாத்தா 

பாட்டி தயங்கி கொடுத்த நீர்மோரை தயங்காது வாங்கி பருகினாள்


"உங்களுக்கு எத்தனை பசங்க எங்க இருக்காங்க" - கயல்

"3 ஆம்பள பசங்க, மூணு பேரும் படிக்க வச்சோம் , நல்ல உத்தியோகம் பாக்குறாங்க, கடைசி காலத்துல நான் ஒருத்தர் வீட்லயும் அவர் ஒரு வீட்லயும் இருக்க சொன்னாங்க, வச்சி காப்பாத்தலானாலும் 

அன்பா பேச கூட முடில அப்புறம் எப்படி சோறு போடுவாங்க .. தனியா கூட்டு வந்து கிடைக்குற வேலைக்கி போனார் இப்போ மிட்டாய் வித்துட்டு இருந்தார், பஸ் ஓடாமல் கொஞ்சம் கஷ்டம்"..


வாங்கி வந்திருந்த மளிகை பொருட்களை 

அடுப்பங்கரையில் வைத்தாள்..பாட்டி "உனக்கு எதுக்கு தாயீ சிரமம்" என்று மறுக்க, "உங்களுக்கு பேத்தி தந்தா வாங்கிக்க மாட்டிங்களா" என்கவும் பாட்டி ஒன்றும் சொல்லாமல் தாத்தா வை பார்த்தார்.


மருந்து வாங்கவும் பிற செலவுகளுக்கும் என தன்னால் முடிந்த தொகையை 

பாட்டியிடம் கொடுத்து "தாத்தவுக்கு மருந்து வாங்கி கொடுங்க... 

ரெண்டு பேரும் உடம்ப பாத்துக்கோங்க..

நான் அடிக்கடி வந்து பார்க்கறேன்"..

தாத்தா கண் காட்ட பாட்டி கயல்விழி கைகளில் ஒரு பொருளை திணித்து, "பாத்து போயிட்டு வா தாயீ" என்றார்.

கயல் கையை பிரித்து பார்க்க கடலை மிட்டாய் கமர்கட் மிட்டாய்கள்.. 

******************முற்றும் ***********


Rate this content
Log in

Similar tamil story from Drama