கருப்பன்
கருப்பன்


ஒரு ஊரில் ராம் என்ற பையன் இருந்தான் அவன் கருப்பன் ஆனாலும் வசீகரமாய் இருப்பான். அவனை கண்டால் எல்லோருக்கும் கொஞ்ச வேண்டும் என்று தோன்றும். ஆனால் கருப்பு நிற மனிதர்களை உலகம் ஏற்றுக் கொள்வது இல்லை. எனவே அவனது குரு அவனை எப்போதும் ஏளனமாய் கேவலமாய் பேசிக்கொண்டே இருந்தார். அவன் என்ன கேட்டாலும் மறுப்பார். விளையாடச் செல்லனும் என்று கேட்டாலும் விடுமுறை கேட்டாலோ என்ன கேட்டாலும் தர மாட்டார். இப்படி இருக்கையில் ஒரு நாள் அவன் செய்த ஒரு சிறு தவறுக்காக அவனை வெளியே நிலத்தைச் உழுவதற்கு சொன்னார்.
அவனும் பசியும் பட்டினியுமாய் அழுதுகொண்டே இருந்தான். சூரிய வெளிச்சம், வெப்பம் தாங்கவே முடியவில்லை. வெளியே எங்குமே நோக்க இல்லை.ஆனாலும் திடீரென்று பார்த்தபோது ஆகாயத்தை நோக்கி பல கலர்கலராய் ஏதோ பறந்து கொண்டிருந்தது.
அது என்று கூட அந்த சிறுவனுக்கு தெரியவில்லை .உடனே அது எங்கிருந்து வருகிறது என்று பார்த்து சற்று தூரத்தில் ஒரு மனிதன் அனுப்பிக் கொண்டிருந்தான் .அந்த மனிதரிடம் சென்று அவை என்ன என்று அந்த பையன் கேட்டான் .
அவர் சொன்னார் இதுதான் பலூன் என்று இதை எப்படி பறக்கிறது என்று கேட்டான்.சிவப்பு ,பச்சை நீலம் ,ஊதா என்று பல வண்ணங்கள் பறக்கிறது கருப்பு பலூன் பறக்குமா ?என்று அவன் கேட்டான். ஒருவன் கையில் கொடுத்தான். படித்த படித்து பெரிய ஆளாக வா அப்போது உன் நிலைமை ஏதும் எல்லாம் போய்விடும் என்று பதில் சொன்னார்.?.