anuradha nazeer

Thriller

4.5  

anuradha nazeer

Thriller

கலிபுருஷன்

கலிபுருஷன்

1 min
245


பாரதப்போர் முடிந்து தர்மர் தனது நான்கு தம்பிகளுடன் ஆட்சிப் பொறுப்பு ஏற்று நடத்திக் கொண்டு இருக்கிறார். அப்போது குதிரை வாங்குவதற்காக தனது மூன்று தம்பிகளை தர்மர் அனுப்பிவிட்டார்[ குதிரை வாங்க வந்த அர்ஜுனன் நகுலன் சகாதேவன் மூவரையும் நோக்கி ஒவ்வொரு கேள்விகள் வீதம் குதிரைக்காரன் கேட்டான் இந்த கேள்விக்கு சரியான பதில் சொல்லி விட்டால் நீங்கள் குதிரையை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று கூறினான்.


முதற் கேள்வி 1 ஊசியின் காதில் யானை நுழைந்து விட்டது ஆனால் அதன் வால் மட்டும்  நுழையவில்லை.


இரண்டாவது கேள்வி : நெல் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது . அதை சுற்றிலும் வேலி போடப்பட்டு உள்ளது .மறுநாள் காலையில் பார்த்தால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெல் முழுவதும் காணவில்லை.


அதனால் மூன்றாவது கேள்வி ஒரு பக்கம் ஒரு கிணறு. மறுபக்கம் ஆறு கிணறு இருக்கிறது. ஒரு கிணற்றில் இருந்து 6   கிணரை  தண்ணீ ரை  நிரப்ப முடியும். ஆனால் அந்த 6 கிணற்றில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரு கிணற்றில் நிரப்ப முடியாது. ஏன் என்று கேட்டார்?


மூவருக்கும் ஒரு பதில் கூட தெரியவில்லை: நீண்ட நேரம் ஆகியும் தன் மூன்று தம்பிகளை காணாததால் தர்மர் அவர்கள், பீமனை அனுப்பி மூவரையும் பார்த்து வரச் சொன்னார்.[ பீமன் இவர்களை அண்ணன் தருமரிடம் அழைத்து வருகிறான்.


அப்போது 3வரும் தர்மரை பார்த்து மூன்று கேள்விகளை கேட்டனர். அதற்கு தர்மர் பதில் சொல்கிறார். கலியுகத்தில் அனைவர் செவி யிலும் கெட்ட விஷயங்கள் மொத்தமும் சுலபமாக போய்விடும் .ஆனால் நல்ல விஷயங்கள் சிறிதளவேனும் கூட உள்ளே நுழையாது.2 பயிர் என்பது மக்கள்..வேலி   அரசியல் தலைவர்கள்.


நாட்டை ஆள்பவர் கலியுகத்தில் மக்களை அவர்களது சுகபோகங்களை சுரண்டி விடுவர். 3 ஒரு கிணறு என்பது தாய் தகப்பன் .ஆறு கிணறு என்பது குழந்தைகள். தாய் தகப்பன் ஆறு இல்லை 10 குழந்தைகள் ஆனாலும் அவற்றை நன்கு வளர்த்து நன்கு உணவளித்து பராமரிப்ப ர் .. குழந்தைகளும் ஒரு தாய் தகப்பனை வைத்து நல்ல உணவளித்து நன்கு பாதுகாக்க மாட்டார்கள்.


இதுதான் கலியுகத்தில் நடக்கப்போவது.[அ ந்தக் குதிரைக் காரன் வேறுயாருமல்ல கலிபுருஷன் .உங்கள் வாயிலாக இந்த பதிலை மக்களுக்கு கூற விரும்பினார் என்று தர்மர் சொல்வதாக பாரம்பரிய கதை..



Rate this content
Log in

Similar tamil story from Thriller