கால்பந்து வீரர் யார்
கால்பந்து வீரர் யார்


உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் யார்’ என்ற கேள்வியைக் கேட்டால் பீலே, மரடோனா, மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ என இந்த நான்கு பெயர்களைத்தான் பெரும்பாலும் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
கால்பந்து ரசிகராக இருக்கட்டும், வல்லுநராக இருக்கட்டும், விமர்சகராக இருக்கட்டும்… ஏன் கால்பந்து வீரராகவே இருக்கட்டும், அனைவரின் சாய்ஸும் இவர்களில் ஒருவராகத்தான் இருக்கும்.
ஆனால், இந்தப் பதிலைச் சொல்லும் பெரும்பாலானவர்களிடமும் ஒரு `ஆனால்’ பதில் இருக்கும். அந்தப் பதில்கள் குறிக்கும் ஆள் ஒருவராகத்தான் இருக்கும் - ரொனால்டோ… ரொனால்டோ நசாரியோ… தி ரியல் ரொனால்டோ! ‘அவருக்கு மட்டும் முழங்கால் அடிபடாம இருந்திருச்சு, அவர் எங்கயோ போயிருப்பாரு’. `இஞ்சுரிலாம் இல்லைன்னா அவரை யாராலும் தடுத்திருக்க முடியாது’ என ஒவ்வொருவரும் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்துவார்கள். தன் காலகட்டத்தில் பல மாயாஜாலங்கள் செய்து நம்பர் 1 வீரராகத்தான் இருந்தார் அவர். ஆனால், அந்தக் காயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் பீலேவுக்கு நிகராக நின்றிருப்பார். காயங்கள், வரலாற்றை மாற்றி எழுதியிருக்கின்றன.
ரொனால்டோவுக்கு நிகழ்ந்ததுபோல் விளையாட்டு உலகில் பலரின் எதிர்காலமும் காயங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோனிகா செலஸ், போ ஜாக்சன், டெல் போட்ரோ, ஷான் டெய்ட்... காயத்தால் பலரின் கரியரும் அவர்கள் தொடவேண்டிய உயரத்தை அடையாமல் முடிந்திருக்கிறது.