இரட்டைக் கோடு
இரட்டைக் கோடு


குமரனுக்கு 18 வயது ஆகிறது. அரசு கல்லூரியில் இளங்கலை தமிழ் முதலாமாண்டு படிக்கிறான் .
கல்லூரி சேர்ந்த முதல் மூன்று மாதம் ஒழுங்காக கல்லூரிக்கு சென்று வந்தான் . அவன் தினமும்
அரசு பேருந்தில் தான் கல்லூரிக்கு சென்று வருவான் . பிறகு ஒரு நாள் அவன் வழக்கம் போல் செல்லும்
பேருந்து அன்று வரவில்லை . அடுத்த பேருந்துக்காக நின்று கொண்டிருந்தான் . அப்போது
தான் சோனியாவை முதல் முறையாகப் பேருந்து நிலையத்தில் காண்கிறான் . அவள் அரசு பள்ளியில்
12ம் வகுப்பு படிக்கிறாள் . அவளை பார்த்தவுடன் அவன் மீது ஒரு குளிர் காற்று வீசுகிறது அவனை
மறந்து அவள் முகத்தை கண்டு ரசிக்கிறான் , இன்பம் கொல்கிறான் . இது வரை இது போல் ஒரு
இன்பத்தை அவன் வாழ்க்கையில் அவன் கண்டதில்லை . அப்போது அவன் நினைத்து கூட
பார்த்து இருக்க மாட்டான் . இந்த நாளில் இருந்து அவனுக்கு எவ்வளவு பிரச்சனைகள் நடக்குமென்று ?
அன்றிலிருந்
து தினமும் அவன் வழக்கமாக செல்லும் பேருந்தை விட்டு விட்டு சோனியா செல்லும்
பேருந்தில் செல்ல ஆரம்பித்தான் . எதாவது சேட்டைகள் செய்து அவளை திரும்பி பார்க்க வைப்பான்.
இது வரைக்கும் இளம் பெண்களிடம் பேசவே பயந்தவன் அவளிடம் எப்படியாவது பேசவெண்டும்
என்று துடித்தான் . பல முறை அவளிடம் பேச முயற்சித்தான் போய் சென்று பேசவும் செய்தான்.
அவள் திரும்ப அவனிடம் பேசவில்லை . ஆனாலும் குமரன் அவள் பின்னே சுற்றினான்.
சில நாட்களுக்கு பிறகு ........
காலாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டது . அந்த 10 நாட்கள் விடுமுறையில்
அவளை குமரன் பார்க்கவில்லை . அவன் மனது மிகவும் ஏக்கதுடன் இருந்தது . குமரன் மிகவும்
துடித்து போனான் . அப்போது தான் முடிவு செய்தான் அவளுடன் வாழ்நாள் முழுவதும்
வாழவேண்டும் என்று.....
அன்று முதல் அவளை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தான் ..................................................................................