இந்திய தாய்
இந்திய தாய்


ஒரு இந்திய தாய் அவள் கிராமத்தில் இருக்கிறாள் .அவளது ஒரே மகன் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான்.
தாயார் பல கடிதங்கள் எழுதினார் .
மகனே உன்னை பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறேன் .
வர வர என் உடல் நலம் குன்றி கொண்டே வருகிறது.
உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று மனமுருகி கடிதம் எழுதினார் .
ஆனால் அவன் வந்து பார்க்கவே இல்லை.
பிறகு டாக்டர் கெடு கொடுத்துவிட்டார்.
நீண்ட நாட்கள் தாங்காது என்று.
இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் பரலோகம் சென்று விடுவார்கள் என்று .
எனவே அக்கம். பக்கத்து மனிதர்கள் அனுப்பினார்கள் .உன் அம்மா நிலைமை மிகவும் சீரியஸ் உடனே புறப்பட்டு வரவும்.உன்னை பார்க்க துடிக்கிறார்கள். என்று.மகனும் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு இந்தியாவிற்கு வந்தார்.
தன் கிராமத்திற்கு . அவன் வருவதற்குள்,அவன் இந்தியா வந்து சேர்வதற்குள் தாய் எமலோகம் சென்று விட்டாள்.
அவளது உடலையும் அக்கம்பக்கத்தினர் அடக்கம் செய்து காரியங்களை முடித்துவிட்டனர்.
பிறகுதான் தாமதமாக மகன் வந்து சேர்ந்தான் .
அப்போதுஅண்டை வீட்டார் அவர்கள்தாயார் எழுதிய கடிதத்தை அவனிடம் சேர்த்தனர்.
இது உன் அம்மாவின் கடைசி ஆசை. இந்த கடிதத்தை உன்னிடம் கொடுக்கும்படி என்று கூறினார்.
மகனும் கடிதத்தைப் பிரித்துப் படித்தான் அவன் கண்களில் கண்ணீர் ஆறு போல்கடகடவென்று ஊறியது.
கண்ணா நீ வயிற்றில் இருந்தபோது கொல்லையில் தென்னைமரம் வைத்தேன்.அது எனக்கு இளநீரா கொடுத்துக்கொண்டே இருந்தது.
நான் இறந்த பிறகும் எனக்கு அது ஓலை கொடுத்து விடும்.
அந்த ஓலையில் என்னை. சுமந்து செல்வார்கள் .ஆனால் என்றுமே உன்னை நான் நெஞ்சில் சுமக்கிறேன்.
நீ என்றாவது வருவாய் .என் ஈமச்சடங்கில் கலந்து கொள்வாய்.அப்போது நீ எனக்கு காரியங்கள் செய்வாய்.
மூன்று நாட்களுக்கு மேல் நீ இங்கு தங்காதே. தினமும் குளித்தால்
நீ தங்கினால் உனக்கு ஜலதோஷம் வரும்.உனக்கு சளி பிடிக்கும்.தைலம் தேய்த்து, ஆவிபிடிக்க நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனவே மூன்று நாட்களுக்கு மேல் கிராமத்தில் நீ தாங்க மாட்டாய்.
உன் மூக்கு முகமெல்லாம் சிவந்து விடும். மூன்று நாளைக்கு மேல் நீ இங்கே இருக்க வேண்டாம்.
கொல்லையில் வைத்தேன்.
அப்பாநமது பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களை நாம் பார்த்து நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் .
அது நமது கடமை.
அவர்கள் இறந்த பிறகு கோடி கோடியாய் கொட்டினாலும் என்ன பலன்?இருக்கும்போது ஒரு கனிவான பார்வை, அன்பான சில வார்த்தைகள், இன்னும் குறைவா போகிறோம். அதனால் நம் செல்வம் போகிறதா ?என்னசற்று நேரம் அவர்களுடன் உரையாடி சற்று நேரம் அவர்களுக்காக செலவழிக்கலாம்.
ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி இரண்டுமே பெற்றோர்களுக்கு ஒன்றுதான்.
இருபாலருமே பெற்றோருக்கு செய்யக் கடமைப்பட்டவர்கள்.
அதில் ஆண் என்றும் பெண் என்றும் வித்தியாசமே கிடையாது.