சோதனை
சோதனை


ஏப்ரல் மூன்றாம் தேதி எனது மருமகளுக்கு பிறந்தநாள் .
என்ன ஒரு சோதனை.
மார்ச் 22 அவள் கணவனுக்கு பிறந்தநாள்.
அன்றும் பிறந்தநாளை கொண்டாட முடியாத இக்கட்டான சூழ்நிலை.
ஏப்ரல் மூன்றாம் தேதியும் எனது மருமகளின் பிறந்தநாளை கொண்டாட முடியாத சூழ்நிலை.
எல்லோரும் வீட்டிலேயே அடைபட்டு கிடந்தோம்.
ஆனாலும் உற்சாகம் மகிழ்ச்சி இல்லை.
சாதாரண சமையல்தான்.
விசேஷமாக ஒன்றும் செய்யமுடியவில்லை.
என்ன கடவுளே இது சோதனை என்று மனதில்மிகவும் வருந்தினும் பிறகு என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
எனக்கு மட்டும்தானா ?
என் குடும்பத்தில் மட்டும்தானா?
உலக அனைத்துமே ஒரு எதிர்வினை சக்திஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
நான் எம்மாத்திரம் என்று நினைத்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
வீட்டிலேயே பிரார்த்தனை வீட்டிலேயே கடவுள் பூஜைவீட்டிலே விளக்கேற்றி மனதார கும்பிட்டோம்வேறு என்ன வழி வேறு என்னதான் செய்ய முடியும்மனம் வருந்தி மட்டும் ஆகப்போவது என்ன இறைவா எல்லோரையும் நன்றாக வாழ்வதை என்று மனமார வேண்டிக் கொண்டோம்.
சதா வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் அன்றில் பறவை. இருவரும். இப்போது வீட்டிலேயே அடைபட்டு கிடப்பது பாவமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய முடியும்?