யாதென அறியாதார்
யாதென அறியாதார்
1 min
465
மாயத்திரை என்பார்
மையிருட் குகை என்பார்
நானெனும் நிலை என்ப
யாதென அறியாதார்
காடென அறிந்தோரே
கானகம் கண்டீரோ?!
நெடுமரக் கூட்டத்தையே
கானகம் என்பீரே!!
வானென அறிந்தோரே
வானகம் கண்டீரோ?!
வெட்டவெளி அதனை
வானகம் என்பீரே!!
அலைகடல் அறிந்தோரே
அலைகளைக் கண்டீரோ?!
ஆடி அலைவது கடலதுதான்
கடலலை என்பீரே!!
ஓவியம் அறிந்தோரே
ஓவியம் கண்டீரோ?!
திரையில் வண்ணம் கண்டு
அதனை ஓவியம் என்பீரே!!
சிறையின் உள்ளே
எரியும் விளக்காய்
வாழ்வை சிதைப்போரே
நானெனும் ஜாலம் கடக்க
எந்த நாளில் விழைவீரோ?!
கண்ணில் படுவதை கண்டுவிட்டதாய்
கருத்தில் கொள்வோரே
மெய்ப்பொருள் உமக்கு
மாயப் பொருளாய்
தோன்றுதல் வியப்பில்லையே