விழியின் துளியில்
விழியின் துளியில்


என் இதயம்
வேதனைப்பட வேண்டுமென்றே சிரிக்கிறாள்
மந்திரப்புன்னகைக்காரி!
வார்த்தையால் பேசுவதைவிட விழியாலே அதிகம் பேசுகிறாள்
அவளின் நடை தொனி
அவளின் இடை சொல்கிறது
காற்று பேசும் அவள் கூந்தல் மணம்
அது என் மனதையும் பேசச் செய்கிறது
மன்மதனே அவள் அழகில் தோற்றுப் போவான்
நான் என்ன சிறு பிள்ளை தானே
அவள் விழி சிந்தும் துளியில் கூட மோட்சம் கிடைக்கும்
தானம் தவம் இவை இரண்டையுமே
பாவையின் பார்வையில் பெறலாம்
அவளே அறியாமல் அவளால்
காயப்பட்ட இதயங்கள் எத்தனையோ
அவளிடம் கேட்டேன் சொன்னால்
அவள் தொனியிலே
விழியின் துளியிலே
அவளும் காயப்பட்டிருப்பாளோ என்னவோ