வெளிச்சம்
வெளிச்சம்
1 min
248
இரவின் முடிவா உன் வரவு எம் கனவின் முடிவில் உன் வரவு ஒளியின் அழகா உன் வரவு என் விழிகள் திறப்பில் உன் வரவு கிழக்கின் கீற்றாய் உன் வரவு எம் உழைப்பின் தொடக்கம் உன் வரவு வரவு வரவு உன்னழகு உன் ஒளியில் தோற்கும் வானின் நிலவு மலர்கள் பூக்கும் உன் வரவில் செடிகள் காய்க்கும் உன் ஒளியில் நிலங்கள் கொழிக்கும் உன் பொழிவில் மனங்கள் கழிக்கும் உன் பேரொளியில் உலகம் உன் தயவில் என்வழி வாழ்வதும் மின்னொளி வீசும் வான்சுடரே என் நன்றிகள் உனக்கு என்றும் கதிரவனே