STORYMIRROR

quotes guru

Romance

3  

quotes guru

Romance

வாழ்க்கை மேற்கோள்கள்

வாழ்க்கை மேற்கோள்கள்

1 min
172

கண்ணீர் எனக்கு பிடிக்கும்

அது என் கவலை தீரும் வரை

உறவுகள் எனக்கு பிடிக்கும்

அது உரிமையாக இருக்கும் வரை

உன்னை எனக்கு பிடிக்கும்

என் உயிர் உள்ள வரை.


உன் மார்போடு சாய்ந்து

முத்தம் பதித்து

என் நெஞ்சோடு உன் முகம் பதித்து

கொள்ள தவம்கிடக்கிறேன்.

உன் முகம் காணாத எனது ஏக்கம்

நீ அறிவாயோ

உன் விழிகளை காணும் வரை

என் கண்ணில் ஏது உறக்கம்!



நேசம் தாண்டியும்

உன்னிடம் எதோ ஒன்று இருக்கிறது.

தீண்டல்கள் இன்றி,பார்வைகள் இன்றி

மௌனத்தை மொழியாக்கி

உன் அன்பை எனதாக்கி

இறுதிவரை உன் அருகில்

நான் வாழ வேண்டுமடா.


Rate this content
Log in

Similar tamil poem from Romance