திருவிழா
திருவிழா
ஊரெங்கும் மாவிலை வேப்பிலை தோரணங்களே அலங்கரிக்கும்,
எங்கும் குழந்தைகளின் மகிழ்ச்சியான விளையாட்டு சத்தம்,
வழியெங்கும் வித விதமான கடைகளே விரிந்திருக்கும்,
இளம் காளையர்களும், கன்னியர்களும் வித விதமான உடைகளில் எல்லோரையும் ஈர்த்திருப்பார்கள்,
பெரியவர்களோ கடவுளுக்கு படைக்க தேவையான அனைத்தையும் கையில் ஏந்தி வருவதும் போவதுமாய் இருப்பார்கள்,
இவையனைத்தும் திருவிழா நேரங்களில் மட்டுமே நம்மால் பார்க்க இயலும்,
எனவே திருவிழாக்களை தவர விட்டுவிடாதீர்கள்....
