திருமணம்
திருமணம்
இரு மனம் ஒரு மனம் ஆகிட
சிறு சிறு குறும்புகளில் சந்தோஷம் தேடிட
கைகள் கோர்த்து வாழ்வில் நடந்திட
காலம் செல்ல செல்ல
காதல் உணர்வு மனதின் ஆழத்தை தேடிட
குழந்தைகள் மூலம் ஒருவருக்கொருவர் தூது அனுப்பி சமாதானம் செய்திட
வாழ்க்கை முடியும் போது தன் காதலியை பிரிய போகும் அந்த நொடி
வரும் கண்ணீர் துளிகள் போதும் அன்பை சொல்லிட.

