STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

திருக்குறள் 36. மெய்யுணர்தல் (356-360) - மு .வா உரையுடன்

திருக்குறள் 36. மெய்யுணர்தல் (356-360) - மு .வா உரையுடன்

1 min
130

356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.


மு.வரதராசனார் உரை:

கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.


357. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.


மு.வரதராசனார் உரை:

ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.


358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.


மு.வரதராசனார் உரை:

பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. 


359. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.


மு.வரதராசனார் உரை:

எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.


360. காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.


மு.வரதராசனார் உரை:

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.



Rate this content
Log in

Similar tamil poem from Classics