பூக்கள்
பூக்கள்
பூக்கள் பூக்கும் தருணத்தை,
யாரும் கண்டதில்லை,
பூவின் வாசம் மெல்லமாய் வெளி வரும் நேரத்தை,
யாரும் அறிந்ததில்லை,
பூக்கள் சிரிப்பதை யாரும் காண்பதில்லை,
பூக்கள் அழுவதை யாரும் கேட்பதில்லை,
பூக்கள் பேசுவதை யாரும் உணர்வதில்லை,
அதனால்....
பூக்களை ரசியுங்கள்,
பூவிடம் பேசுங்கள்,
பூக்களுடன் சிரியுங்கள்,
நீங்களே உங்களை அறிவீர்கள்....
