பறவை
பறவை
1 min
326
பறவை பறத்தல் பார்ப்பது மகிழ்ச்சி
நான் மரத்தின் கீழ்
நிற்கிறேன் அண்ணாந்து பார்த்து
அந்த பறவையோடு பறக்கிறேன் நானும்
மேலே மேலே வான்வெளி நோக்கி
இலக்கு அற்ற பயணமாய் தொடர்ந்து
அதன் தேடல் எதுவோ?
அதுவே எனது தேடல்
நானும் தேடுகிறேன்
பறவையும் தேடுகிறது இன்னும்
தொடர்கிறது எல்லையற்ற
அந்த இலக்கு நோக்கி...