ஓடி ஒளியும் மனிதம்
ஓடி ஒளியும் மனிதம்
நிலை மாறும் உலகில்
வாழும் நாடகச் சூழலில்
அரிதாரம் பூசியே
நாளும் அரங்கேறும்
வாழ்வு தனில்
சுயமும் தான் மரணித்ததோ?
சடலங்களின் முகம் நோக்க
நேரும் பொழுதுகளில்
உள்ளே உறங்கும் சுயமும்
சற்றே எட்டிப் பார்க்க
ஆங்கே படபடக்கும்
இதயத்தின் ஓசையை
மறைக்க எத்தனித்து
முகமும் ஆங்கே
சகஜ முகமூடி அணிந்து
மனதை மறைக்கப் போராடி -
தோற்கும் ஒற்றை நொடியில்
மனிதம் இதயக் கதவிடுக்கில்
மெல்ல எட்டிப் பார்த்தே -
மீண்டும் ஓடி ஒளிகிறது !