நல்ல கல்வி
நல்ல கல்வி

1 min

160
ஒரு கொள்ளும் பையின் பின்னால் ஓடுகின்றன...
இளைத்தக் குதிரைகளும்!
தமிழ் மணக்கும் வீதிகளில்
குப்பைகளால் காசு பறிக்கும் தனியார் பள்ளிகள்
பட்டாம்பூச்சிகளின் முதுகில் பாறாங்கல் சுமை.
கொக்கரிக்கும் புரியாத கருப்பு மொழியால் விழி பிதுங்கி
கருகும் இதயம் பயத்தில்
வெளியில் சிரிக்கும்
திணித்த
புட்டிப்பாலால்
வயிறு புடைத்த
சவளைப் பிள்ளைகள்
கிளியாய்ச் சொல்லும்
நாங்கள் இந்நாட்டு மன்னர்கள்!