நிலை இல்லாதது
நிலை இல்லாதது
நாம் மற்றவர் மீது கொள்ளும் காதல்,
நிலை இல்லாதது,
ஏனென்றால் அது எல்லையை மீறும் போது
உறவுகள் உடைந்து போய் விடுகிறது,
நாம் மற்றவர் மீது வைக்கும் அன்பும்,
நிலை இல்லாதது,
ஏனென்றால் அது அதிகரிக்கும் போது,
ஏமாற்றமே வந்து சேர்கிறது,
நாம் மற்றவர் மீது கொள்ளும் அதிக நம்பிக்கை,
நிலை இல்லாதது,
ஏனென்றால் அது அதிகரிக்கும் போது,
துரோகமே விலையாகிறது,
நிமிடத்திற்கு நிமிடம் மாறுகின்ற இந்த உலகினில்,
நிலையானது என்பது எதுவும் இல்லை.....
