நானும் காதலிக்கிறேன்
நானும் காதலிக்கிறேன்

1 min

132
என்னையே எனக்கு அறிமுகப்படுத்திய என் ஆகச்சிறந்த நண்பர்களை காதலிக்கிறேன்
சிறு வயதிலேயே எனக்கு வாழ்க்கையை புகட்டிய என் வறுமையை அனுதினமும் காதலிக்கிறேன்
ஆமாம்,
நான் தவறி விழும் போது என்னை தட்டி கொடுத்த என் தன்னம்பிக்கையை காதலிக்கிறேன்
சமுதாயத்தில் எனக்கென ஒரு தனி அங்கிகாரத்தை கொடுத்த என் கல்வியை காதலிக்கிறேன்
என் வாழ்க்கையை வளமாக்கிய அவமானங்களையும், நிராகரிப்புகளையும் காதலிக்கிறேன்
என்னை புரட்சிப்
பெண்ணாக மாற்றிய என் வைராக்கியத்தை காதலிக்கிறேன்