உயிர் (எழுத்துக்களில்) காதல்
உயிர் (எழுத்துக்களில்) காதல்


அளவுகடந்த உன் அன்பு வேண்டும்,
ஆனந்தமாய் சாய்ந்து கொள்ள உன் தோள் வேண்டும்,
இன்பத்தேனை பாயவைக்கும் உன் குரல் வேண்டும்,
ஈர்ப்பு தன்மையுள்ள உன் காந்த கண்கள் வேண்டும்,
உண்மையுள்ள உன் நெஞ்சம் வேண்டும்,
ஊக்குவித்து தைரியம் சொல்லும் உன் மொழி வேண்டும்,
எதையும் எளிமையாக்கிடும் உன் நன் தன்மை வேண்டும்,
ஏக்கத்தில் சிதறவைக்கும் உன் நினைவு வேண்டும்,
ஐந்து நொடி கூட தரையில் நின்றிடாத உன் பாதங்கள் வேண்டும்,
ஒரு நாளும் தீங்கு நினைக்காத உன் நெஞ்சம் வேண்டும்,
ஓரக்கண்ணில் விளையாடும் அந்த கள்ளச்சிரிப்பு வேண்டும்,
ஒளடதமானாலும், என்னை வருத்தினாலும், உன் காதல் எனக்கு வேண்டும் !