எனது இந்தியா
எனது இந்தியா
எனது இந்தியாவில்,
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்று ஆதிக்க வர்க்கத்திடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறோம்
என் இந்திய நாட்டில்,
இந்துவாய்,இஸ்லாமாய்,கிறிஸ்துவராய் யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்.
குழந்தையாய்,பருவ மங்கையாய்,கிழவியாய் ஆணாதிக்க சமூகத்தில் அடிமை பட்டுக் கிடக்கிறோம்
மது மற்றும் பிரியாணிக்காக ஆசைப்பட்டு இந்த தகுதியற்ற அரசாங்கத்திடம் அடிமைப்பட்டுக் கிடக்குறோம்
இயந்திரத்தைப் போல் இயங்கியும்,அறிவின்மையால் பெரும் முதலாளிகளிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறோம்
திறமையிருந்தும், உரிமையிருந்தும் அதை வெளிப்படுத்த முடியாத ஊமைகளாய் இச்சமூகத்தில் அடிமை பட்டுக்கிடக்கிறோம்
ஆறறிவிருந்தும், அறிவிலிகளாக இச்சமூகத்தில் அடிமைப்பட்டுக்கிடக்கிறோம்.....
மதமற்ற
மனிதநேயமிக்க
சாதியற்ற
சமத்துவமான
ஊழலற்ற
உறுதியான
இந்தியாவே எங்கள் இந்தியா
மாற்றத்தின் விதையாய் நாம் !
