STORYMIRROR

Siva Kamal

Drama Romance Action

3  

Siva Kamal

Drama Romance Action

முத்தம்

முத்தம்

1 min
510

முத்தம் காதலின் வெஞ்சனம், ஒரு வாய் வாங்கிக்கொள் என்கிறாய்!

இட்டுக்கொள்ள அனுமதி பெறப்பட்ட இடங்களிலிருந்து வாய்தவறி எங்கெல்லாமோ விழுந்துவிடுகிறது முத்தம்

பாதத்தில்தான் முத்தம் வைக்க சம்மதித்தாய், மன்னித்துவிடு எனக்குதான் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் போய்விட்டது.

முதல் முதலாக உதட்டு முத்தம் வாங்குகின்ற ஆச்சர்யமோ வேடிக்கையோ என்ன நினைத்தாயோ! முத்தத்தின்போது கன்னம் நெருக்கி இதழ் நீள சிரிக்கிறாய். நானிப்போது உன் சிரிப்பை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்.

காலை கண்விழித்ததும் நினைவில் மிஞ்சியிருக்கும் மங்கலான காட்சிகளில் தானாகவே உத்தேசித்துக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள ஆளாய் அலைகிறது அன்புரு! ''நான் தூங்கிட்டு இருக்கும் போது முத்தம் கொடுத்தியோ?''

இடம் பொருள் ஏவல் நேரம் காலம் பார்த்துத் திட்டமிட்டு ரசனை மேவப் பொறுமையாக பகிரப்படுபவை "முத்தம்" குறுமன நடுக்கத்தோடு திடுதிப்பென்று இதழ்பதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கி ஆறஅமர அதையே நெஞ்சினிக்க நினைத்துக்கிடத்தல் "இச்"

மோகத்தின் முடிவில் அவள்தன் முத்தங்கள் என்பன பாராட்டுவதற்கு வெட்கி தரப்படும் பரிசில்!

எவ்வளவு பிடிக்குமென்பதை விளக்க வார்தைகள் பற்றாக்குறையாகும் போது, முத்தங்களே உதவுகின்றன.!

பரிபூரணங்களில் என்ன இருக்கிறது? முழுமை பெறாதிருத்தலே சௌந்தர்யம்!

முடித்து முகம் நகர்த்திய பின்னும் ஏதோ குறையிருப்பதாக தோன்றி மீண்டும் துவங்கப்படும் முத்தங்கள் தீர்வதேயில்லை...


Rate this content
Log in

Similar tamil poem from Drama