மாலை நேரம்
மாலை நேரம்
கதிரவன் ஒளிச்சுடர் தாக்கம் குறைய,
இரவவன் தன் காரிருளால் வையம் நிறைக்க ஆரம்பிக்க,
மாலை கூடு திரும்பும் பறவைபோல்
வேலை முடிந்து வரும் மக்கள் வீடு நோக்கி நகர,
பள்ளி,கல்லூரிகள் தன்னுடைய நெடிய வேலை நாளை முடித்துக்கொள்ள,
அந்த மாலை பொழுது பறவைகளின் இன்னிசையை,
வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தும் மனிதனுக்கு மாலை பொழுதில் இருப்பதை உணர்த்துகிறது.
