குருவிக் கூடு
குருவிக் கூடு
பாதை மாறிய குருவி
குடும்பச் சுமை வேண்டி
வெளிநாடுதான் சென்றதுவே!
குடும்பங்கள் சிறகு
விரித்து பறக்கையிலே
பழைய கூடு தேடி
இருப்பிடம் சென்றபோது
முளைத்திருந்த அடுக்ககங்களின்
வரிசையில் கூடுகள்
கலைந்து குப்பைக்கு
சென்றது கண்டு
குப்பைத் தொட்டியில்
வெட்டுண்டு கிடந்த
மரங்களிடம் காணாமல்போன
கூடு குறித்த விசாரணையில்
நெகிழி ராட்சசன் உருவாகி
நிலவளம் அழித்ததால்
பசுமை இங்கே குப்பையில்
என்றே மரங்கள் கண்ணீர்
விட்டனவே!