கடமை செய் இளைஞனே...
கடமை செய் இளைஞனே...
பொழுது சாயும் அந்தி மாலை நேரம்
கதிரவன் மனதில் சற்று கவலை
உலகுக்கு ஒளி தரும் திருப்பணியை
தனக்கு பின் தொடர போவது யார்?
விடை தெரியாமல் விடை பெற
விருப்பமில்லை அவனுக்கு ,கதிரவன் மறையும் எண்ணமின்றி கவலை கொண்டான்
அன்று பொழுதும் இன்னும் சாயவில்லை
நான் சென்றபின் ஒளி தர போவது யார்?
கதிரவனின் கூக்குரல் காடு மலையெங்கும்
கேட்க, நானிருக்கிறேன் என ஒரு நம்பிக்கை குரல்
நெடுந்தொலைவில் எதிரொலியாய்..!!
குடிசை வீட்டில் ஏற்றப்பட்ட ஒரு சுடர் விளக்கு
அக்குடிசைக்கு வெளிச்சம் தந்து பதில் கூறியது
அந்த கிராமந்தோறும் தீபங்களின் பிரகாசம்.!
குதூகலத்துடன் விடை பெற்றான் கதிரவன்..
இளைஞனே..!! கலாம் எனும் கதிரவனுக்கு
நம்பிக்கை உன்மேல்..! சுடர் விட்டு பிரகாசி.. !
இருள் துன்பம் எரித்து கடமை யாற்று வோம்
மாற்றங்கள் ஆரம்பிக்கட்டும் நம்மிடமிருந்து..!!
