அடியே என் அன்பு தோழி
அடியே என் அன்பு தோழி
1 min
395
அடியே என் அன்பு தோழி..
அழகிலே உன்னை மிஞ்ச பலர் உண்டு ஆனால்
அன்பிலே உன்னை விஞ்ச யார் உண்டு?
அடியே என் அன்பு தோழி
நிறமும் வனப்பும் அழகின் குறியீடு
எனில்
உன் மனமும் நல்குணமும் நற்பெண்ணின் அளவீடு..
அடியே என் அன்பு தோழி
மூக்கு பிடிக்க உன் கையால் உண்ண முடியாதுதான் ஆனால்
மூச்சு முட்ட நீ காட்டும் அன்பில்
மூக்கை பிடித்துக் கொண்டேனும் சாப்பிடுவேன்
அடியே என் அன்பு தோழி
தித்திக்கும் தீபாவளி நாளில்
துன்பம் எனும் நரகாசுரன்
உன் தக்காளி சாதத்தில் சாகட்டும் !!
அடியே என் அன்பு தோழி
கஷ்டமென வந்தால் எனக்கு call அடி
உன் வாயாடித்தனத்தால் அவ்வபோது
என்னை சாவடி..
அடியே என் அன்பு தோழி
இந்த தீபாவளி இனிப்பு தீபாவளியாய் ,
உன் அடுத்த தீபாவளி தலை தீபாவளியாய்..
