கோடை
கோடை
உடல் வியர்த்திட தொண்டை வறண்டதே,
மாலை சூரியன் கூட மறையாமல் நின்றதே
விரைந்தேன் நாட்காட்டி தேடி,
அடடே ! பங்குனி வந்துவிட்டது.
கண்ணுக்கு எட்டும் தூரம்வரை கானல் நீர் தோன்றுதே,
காகிதம் கூட நெருப்பில்லாமல் எரிகின்றதே.
தைத்திங்கல் வருகையில் பகவானே உன்னை நாடி,
பச்சரிசி பொங்கலிட்டு வணங்கி மகிழ்ந்தோமே.
கடல் நீர் கூட வற்றிப் போகுமாம்,
கண்கள் கலங்கி மக்கள் நிற்கின்றனரே
மேகமெல்லாம் வானவில் தேடிட ,
வெயில் வந்தால் வானம் கூட நீர்தேடி அழுகின்றதே.
அடுப்பில்லாமல் அப்பளம் பொரிகின்றதே.
ஆற்று நீர் அரண்டு போகுதே - அய்யோ !
அதனால் ஓடவும் முடியவில்லை.
மழை வந்து சென்றால் வரம் என நினைப்பர்,
பூமி தாயால் கூட தாங்கமுடியவில்லையே.
குளிர்பானம் தேடி சென்ற இடத்திலே,
குளிர் கூட எரியுதே.
தின்னை வீட்டில் அமர,
கோடை கால வெயிலும் குளிராகிப் போகின்றதே..
-வே.ஸ்வேதா.
