கவிதையின் மகிமை
கவிதையின் மகிமை
1 min
266
இசையோடு சேர பாடலாவாய்,
உணர்வோடு சேர காதலாவாய்.
மனம் கோணி பாடிடும் துன்பமாய்,
நலம் பேணி நாடிடும் இன்பமாய்.
உயிர் உடல் உணர்வில் கலந்தே
அகம் அறிவு ஆற்றலில் வெளிப்படுவாய்.
சுதந்திர சிந்தனை தந்த பாரதிதாசனோ,
சுகமும் சோகமும் பாடிய கண்ணதாசனோ,
சகலமும் எழுதிய வாலியோ,
சொல்லில் விளையாடும் வைரமுத்தோ,
நாட்கள் கடந்து வாழும் நினைவுகளிலோ
நாவினால் கூட சொல்லாத பிணைவுகளிலோ
மகாகவி பாரதியை இவ்வுலகுக்கு தந்த நீயே,
பாரையே வரிகளில் உள்ளடிக்கினாயே.
கண்ணீரின் சொற்துளியாய்,
கரைந்திடும் நெஞ்சினில் தேன்துளியை,
கோபத்தின் வெம்மை கரைந்திட,
கருணையின் தென்றல் கசிந்திடுமே.
உயிரின் மொழியிலோ, மௌனத்தின் குரலிலோ,
அமைதியின் வெண்மையோ, கோபத்தின் சிவப்போ,
பேரண்டமும் பேனாவால் பிறந்திடுமே
அடடே கவிதையின் மகிமைதான் என்னே!
