கிளிஞ்சல் பூக்கள்
கிளிஞ்சல் பூக்கள்
கன்னியின் நினைவுகளில்
காதலென்னும் கடல் துடிக்கும்.
இரவெல்லாம் பகலாகி
அவன் நினைவில் ஓயாத
அவள் மனதில் நிலநடுக்கம்.
உயிரோடும் உயிருக்குள்
ஒற்றை நினைவொன்றாக
உறவாடி தள்ளாடும் பூவின்
தனிமைக்குள் கேட்கும்
காற்றிசைக்கும் மத்தளம்.
அவள் கண்களால்
தன் மனதுக்குள்
அவனைத்தேடி
கண் விழித்து பார்க்கையில்
அவன் மனதுக்குள்
அவள் துரத்தி ஓடும்
காதல் பட்டாம்பூச்சிகள்.
காடுகளின் மின்னொளியில்
கண் கூசி அலையும்
குளிர்மழையின் ஸ்வரம் பட்டு துளிர்விடும் முல்லையாய்
அவளுக்குள் உருகி பின்
அவனாகும் தியானம்.
