கேள்வியின் பதில் கிடைக்குமா?
கேள்வியின் பதில் கிடைக்குமா?
ஆகாயத்தில் ஒரு அழகிய வெள்ளை நிறத்தில் பெரிய பந்தை கண்டேன்,
என்ன ஒரு அழகு என் மனதை கொள்ளைகொண்டது அந்த பந்து,
அதை எப்படியாவது என்னக்கு வாங்கி தருவாயே என்ன கேட்டேன் என் அன்னையை.
கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் வியந்து நின்றாள் என் அன்பு அம்மா,
ஏன் இப்படி வியக்கிறாள் என ஒன்றும் புரியாமல் இருந்தேன் நான்,
வருடங்கள் பல ஓடின அத்துடன் நானும் வளர்த்தேன் ஒரு வாலிபனாக.
படிப்பை முடித்தவுடன் என் கனவான ஆகாயத்தின் வெள்ளை பந்தை அடைய கிளம்பினேன்,
சிறு வயது முதல் கொண்ட ஆசை ஒரு கனவாக மாறி இன்று நான் ஒரு விஞ்ஞானியாக உள்ளேன்,
அந்த அழகிய பந்தை பற்றிய ஆராய்ச்சி செய்யும் என்னை கண்டு வியந்தாள் என் தாய்.
இளமை காலத்தில் ஒரு கேள்வி அதன் விளைவு இன்று அந்த கேள்வியின் பதிலை தேடும் பணி,
இப்படி வாழக்கை அமைய அன்று என் அன்னை பதில் கூறாமல் இருந்தது தான்,
ஏதேனும் கதை கூறி சிறுபிள்ளை என்னை தேற்றியிருந்தால் இன்று விஞ்ஞானியாக இருந்திருக்க இயலாது.
