இழப்பின் மெய்
இழப்பின் மெய்
அவரது இடம் வெறுமனே ஆகிவிட்டது வார்த்தைகளால் மட்டுமே!
துன்பத்தை சுமந்து இன்பத்தை தந்தீரே, ஏன் !
எங்களை வீழ்த்தி விடும் என்ற எண்ணத்தினால்லா!
பாதுகாக்கும் கவசமாய் இருந்திரே.
ஆனால் இன்று,
பார்வைக்கு தென்படாமல் மனதால் மட்டும் உணரும் வண்ணமாய் ஆகிவிட்டிரே!
எதையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றோமே!!
கற்றுக் கொடுத்திருக்கலாமோ!!
அதை மட்டும் ஏன் தனிமையில் சுமந்தீர்?
உம்மோடு இருந்த சந்தோஷமான நாட்கள் இன்று
கண்ணீரில் ஆழ்த்துகிறதே.
மற்றவர்களுக்கு கோவக்காரராகவும் எமக்கு பாசக்காரராகவும் தோற்றமளித்தீரே.
உமது உடல் ,மன வலியை காண்பிக்காமல்
தனிமையில் தாங்கிக் கொண்டிரே!
என் மனம் உம் சோகத்தை கவனிக்க
மறுத்துவிட்டதோ?
எனது நம்பிக்கை அழிந்துவிட்டது உமது இறுதி நாள் அன்று.
இன்றும் உம்மை
நினைக்கும் போது தொண்டை
அடைகிறதே,
மூச்சுக்காற்று வெளியே வர தவிக்கிறதே,
விழிகள் நீரை தெரிவிக்காமல் இருப்பது போல்
நடிக்கிறதே.
நீவீர் இல்லாத இடத்தில்
அனைகள் ஓங்குகிறதே.
என்ன செய்வேன்?
நீவீர் இல்லாத இந்த
நாடகத்தில்!!!
- ஆமினா சாகுல்.
