இதயத்தின் குரல்
இதயத்தின் குரல்
சில பொழுது புன்னகையுடன்,
சில பொழுது வெறுமையுடன்,
எப்பொழுதும் ஏக்கங்ளுடன்.
மறக்க நினைப்பது முட்டாள்த்தனம்,
விதை விதைத்து மரமாய் வளர்வது
போல் - நியாபகம் வேரூன்றியது.
அடியோடு பிடிங்கிவிட்டால் ஆறாத
வடுவாகிவிடும் ஆதலால்
உண்மையை ஏற்றுக்கொள்கிறேன்
ஆனந்தத்தோடு,
உன்னை இருளில் ஆழ்த்திவிட
வேண்டாமென.
- ஆமினா சாகுல்
