STORYMIRROR

வினு மணிகண்டன்

Classics

4  

வினு மணிகண்டன்

Classics

சவரக்கத்தி

சவரக்கத்தி

1 min
239

சவரக்கத்தி


சவரக்கத்தியை

யாரெல்லாம்

சக்கரவர்த்தி என்று

படித்தது.

நான் முதலில்

அப்படித்தான் படித்தேன்.


கழுத்தில் கத்தி

வைத்ததற்கு

காசு கொடுத்துவிட்டு

வரும் பழக்கம்

இங்கு தான்.... 


கூழுக்கு மட்டுமே ஆசை

மீசைக்கு ஆசையில்லை

சில சமயங்களில்... 


ஆயிரம் சொல்ல 

நினைத்து வந்தாலும் 

உட்கார்ந்தவுடன் 

தூங்கி விடுகிறான்

பேருந்து பயணம் போல... 


கத்திக்கு முகம் பழகிக் கொள்கிறது

முகத்திற்கு கத்தி பழகிக் கொள்கிறது. 


கடைக்காரர் தொடுக்கும் 

நகைச்சுவைக்கு 

சில சமயங்களில் 

வாய்விட்டு 

சிரிக்க முடிவதில்லை


அரசியல் பழக 

அருமையான இடம்

இந்த சட்டையில்லா சபை.



Rate this content
Log in

More tamil poem from வினு மணிகண்டன்

Similar tamil poem from Classics