அவள் ❤️
அவள் ❤️


அவளின், சில பார்வையில்
விழுந்தேன்.
என்னை தொலைத்தேன்.
அவளின், பல வார்த்தைகளில்
எழுந்தேன்.
என்னை உணர்ந்தேன்.
துணை நின்ற தூணும் அவளே.
தொலை தூர பிம்பத்தின்
தேயாத வண்ணமும் அவளே.
குளிர்கால பனியாய் அகம் நூறு பூ பூத்திட,
இதம் ஈடுயிணையில்லா தென்றல் அவளே.
அன்பு.! காதல்.! கவிதை.!
இவை மூன்றும் இதயத்தின் பொக்கிஷமானால்,
அந்த பொக்கிஷத்தின் பேராசை
அவளே🖤.