ஆதியும் அந்தமும்...
ஆதியும் அந்தமும்...


சருகாண இலைகள்
மண்ணுக்கு உராமாகி......
உரம் உறிஞ்சிய வேர்கள்
மரம் சுமக்கும் தளமாகி.....
வேர் தந்த உரம் கொண்டு
கிளை வளர்க்கும் தண்டாகி.....
கிளை விரித்து கதை பேசும்
பசுமை இலையாகி....
இலை இப்போ இங்கில்லை
எங்கே என்னும் கேள்விக்குறியாகி....