Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Thriller

4.0  

anuradha nazeer

Thriller

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி

1 min
237


2006ஆம் ஆண்டு. ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணம் வழங்கச் சென்றிருந்தார் கலாம். அங்கே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மாணவன் ஸ்ரீகாந்த்தைச் சந்தித்தார்.


``நீ எதிர்காலத்தில் யாராக ஆக வேண்டும்?’’ என்று அவர் கேட்ட கேள்விக்கு ஸ்ரீகாந்த் பதிலளித்தான்: ``ஒருநாள் நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதியாக ஆவேன். அதுதான் என் லட்சியம்.’’


எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை. அதோடு, ``அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள எம்.ஐ.டி-யில் கல்வி கற்பது என் லட்சியம்’’ என்றும் குறிப்பிட்டான். அந்த லட்சியம் நிறைவேறியது. 10ஆம் வகுப்பில் 90 சதவிகிதமும், 12ஆம் வகுப்பில் 96 சதவிகிதமும் மதிப்பெண்கள் பெற்று, `லீடு 2020’ (Lead 2020) என்ற இயக்கம் மற்றும் ஜி.ஈ (GE) நிறுவனத்தைச் சேர்ந்த சில தன்னார்வலர்களின் உதவியுடன் அவன் அமெரிக்காவுக்குச் சென்றான்.


படித்து முடித்தவுடன் எங்கள் நிறுவனமே உன்னை வேலைக்கு எடுத்துக் கொள்ளும்’ என்றது ஜி.ஈ நிறுவனம். `உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதியாக ஆகா விட்டால், உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அந்த நிறுவனத்துக்கு பதிலனுப்பினான் ஸ்ரீகாந்த்.


`இப்படிப் பட்ட லட்சியமுள்ள இளைஞர்கள் தாம் இன்றைக்கு இந்தியாவுக்குத் தேவை’ என்று குறிப்பிட்டார் அப்துல் கலாம்.



Rate this content
Log in

Similar tamil story from Thriller