STORYMIRROR

ANURADHA CHANDRASEKHAR

Drama

4  

ANURADHA CHANDRASEKHAR

Drama

பயத்தைப் பார்த்து பயம்

பயத்தைப் பார்த்து பயம்

1 min
384

கரப்பான்பூச்சியைக் கண்டால் எனக்கு பயம்

என்னைக் கண்டு அது பயந்தோட

அதைக் கண்டு நான் பயந்தோட

எனக்கு பயந்து அது பறக்க

அதைக் கண்டு நான் பாய

யாருக்கு பயம்? எனக்கா? அதற்கா?

பயத்தைப் பார்த்து பயப்படும் ஒரே ஆள் நான்தானா? 


யாருக்கு யார் வில்லன்?

அதன் பயத்தில் அர்த்தமுண்டு

பூச்சியை நசுக்குவதுதானே மனிதவீரம்!

நான் பயப்படுவதில் என்ன அர்த்தம்?


கரிய சிறகுகள் நயவஞ்சகரின் இருண்ட மனதைக் காட்டிக் கொடுக்கிறனவா?

கோணிநடக்கும் கால்கள் கயவர்களின் 

கோணல் புத்தியை பிரதிபலிக்கின்றனவா?

என் அனுமதியின்றி என்மேல் ஊர்ந்து படரும்

காமுகனை அடையாளம் காட்டுகின்றனவா?


கற்றுக் கொள்ள ஆயிரம் இருக்க

விலகும் பயத்தில் வாழ்க்கையைத் தொலைப்பானேன்? 


Rate this content
Log in

Similar hindi poem from Drama