வளர்ப்பு பூனைகளுக்குகொரோனா
வளர்ப்பு பூனைகளுக்குகொரோனா
அமெரிக்காவில் வளர்ப்பு பூனைகளுக்கு பரவிய கொரோனா
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் முதன்முறையாக 2 வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆனால் பூனைகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவும் என எந்த ஆதாரமும் இல்லையென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கின் இரு வேறு இடங்களில் பூனைகளுக்கு சுவாச பிரச்னை இருந்துள்ளது. விரைவில் முழுமையாக குணமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. பூனைகளுக்கு கொரோனா தொற்று வீட்டில் இருந்தவர்களிடம் இருந்தோ அல்லது அண்டை வீட்டாரிடம் இருந்து பரவி இருக்கலாமென அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் பெண் புலி நாடியா, சிங்கத்தை தொடர்ந்து தற்போது பூனைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் நியூயார்க் நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே வளர்ப்பு பிராணி உரிமையாளர்கள் பயப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகள், வளர்ப்பு பிராணிகள் தொற்றால் பாதிக்கப்படலாம். வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லையென தொற்று நோய் நிபுணரும், கொரோனா விவகாரத்தை கவனித்து வரும் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிமையாளர்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளை வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடனோ அல்லது பிற விலங்குகளுடனோ தொடர்பு கொள்ள அனுமதிக்கக்கூட
ாது. பூனைகளை வீட்டுக்குள்ளே வைத்திருக்க வேண்டும். நாய்களை கட்டி போடுமாறும், மற்ற விலங்குகள், மனிதர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 6 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்படுகிறது.
உலகளவில் கொரோனா தொற்று ஒரு சில விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை பெரும்பாலும் கொரோனா பாதிக்கப்பட்ட நபரிடம் தொடர்பு உள்ளவை . அமெரிக்காவில் கொரோனா தொற்றை பரப்புவதில் வளர்ப்பு பிராணிகளுக்கு முக்கிய பங்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவை அவற்றின் நலனில் சமரசம் செய்யலாம். எவ்வாறு பூனை உட்பட வெவ்வேறு விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இந்த விவகாரத்தில் விலங்குகளுக்கு வழக்கமான பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நடந்த ஆய்வில் பூனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட கூடுமெனவும், நாய்கள் பாதிக்கப்பட கூடியவை அல்ல என கூறப்பட்டிருந்தது. உலக சுகாதார நிறுவனமும் மனிதர்களுக்கும், வளர்ப்பு பிராணிகளுக்கும் தொற்று பரவுவதை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்திருந்தது. சயின்ஸ் இதழின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு முடிவுகளில், பூனைகள் மற்றும் மரநாய்கள் சார்ஸ் COV 2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படலாம். இது மனிதர்களை பாதிக்கும் கொரோனா தொற்றின் அறிவியல் பெயர் ஆகும். சீனாவில் ஜன.,பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆய்வில், நாய்கள், கோழி, பன்றி மற்றும் வாத்துகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.