STORYMIRROR

Shanmuga Devi

Romance

4  

Shanmuga Devi

Romance

விழியில் மலர்கிறேன்

விழியில் மலர்கிறேன்

2 mins
4

கனவிலே கரைகிறேன்

நினைவிலே உறைகிறேன்

விழியிலே மலர்கிறேன்.. 


அதிகாலைத் தூக்கம் அதுவும்

மார்கழி மாதம் பனி விழும் நேரம் போர்வையில் உடல்

முழுவதும் குறுக்கி தூங்கும் போது கனவுகள் அப்படியே

உண்மை போல் மதுமிதாவிற்கு தோன்ற

அவளின் அருகில் யாரோ

ஒருவன் அவளின் மனதில்

தனக்கு வரும் கணவன்

இது போல் இருக்க வேண்டும்

என்று உருவகப் படுத்தி

வைத்திருந்தாள்.. 


அவளின் அருகினில் படுத்து இருப்பது போலும்

அவளின் தலை அவனின்

நெஞ்சத்தை மஞ்சமாக

வைத்து உறங்கிக் கொண்டு

இருக்க அவனோ இவளின்

விழியில் கலந்து கொண்டு

காதல் தூது விடுவது போல்

இமைகள் மூடாமல் இவளை

ரசித்துக் கொண்டு இருக்க

இது கனவா நிஜமா என்று

இவளைக் கிள்ளிப் பார்த்துக்

கொள்கிறாள் இது கனவு

என்று அவளின் அம்மா

மது எந்திரிடி உன்னைப்

பெண்பார்க்க வருகிறார்கள். 

இப்படி தூங்கினால் என்னடி பண்ணுவது.. 


யார் செஞ்ச புண்ணியமோ? 

அக்கா வாக்கப்பட்டு போன குடும்பத்தில் உன்னைப் பார்த்து விட்டு கட்டினால்

இந்தப் பொண்ணைத் தான் கட்டுவேன் சொல்லி விட்டாராம் மாப்பிள்ளை

அது தாண்டி காலையில்

எட்டு மணிக்கே வருகிறார்கள். 



இந்தப் பனிக்காலத்தில்

தலையை உலராது கொஞ்சம் வெரசா எந்திரிச்சு போய் கிணத்தடியில் நீரை இரைச்சு

வைச்சு குளிடி சீக்கிரம்

எந்திரி.. 


காலையில் எந்திரிச்சு எனக்கு கூடமாட உதவிலைனா கூடப் பரவாயில்லை போற இடத்திலே என் மானத்தை

வாங்காமல் இரு எந்திரிடி

என்று எழுப்பிக் கொண்டு

இருந்தார். மதுமிதா தாய்

சிவகாமி.. 


சிவநேசன் சிவகாமி தம்பதிக்கு மதுமித்ரா

மதுமிதா இரண்டு மகள்கள். 

பெரிய பொண்ணு திருமணம் செய்து கொடுத்தது. கோயம்புத்தூர் இவர்கள்

இருப்பது தாராபுரம்.. 


மதுமித்ரா கணவன்

ஜெய்கணேஷ் கவிண் தன் அக்காவின் மகன் அவனின்

பிறந்தநாள் விழா மதுமிதா

சென்று இருந்தாள். அங்கே வைத்து பார்த்து விட்டான்

ஜெய்கணேஷ் சித்தி பையன்

இப்போது திருமணம் செய்தால் மதுமித்ரா அண்ணியின் தங்கையைத் தான் செய்து கொள்வேன் சொன்னதால் அவனின் பெற்றோர் இவன் திருமணத்திற்கு சம்மதித்தது

போதும் என்று திருநாவுக்கரசு

திரிபுரசுந்தரி இவர்களின் புதல்வன் தான் மதிவாணன். 


இவன் தான் கதையின் நாயகன்... நாயகி கனவில் சஞ்சாரம் செய்ய இவனோ தன்னவளையே நினைத்துக் கொண்டு எப்படா போய் அவளைப் பார்ப்போம் பேசுவோம் என்று காத்து காத்து கண்கள் இரண்டும் பூத்து போச்சு என்று நினைத்தவனாய் இன்று

அவளிடம் தன் காதலை சொல்லி விட வேண்டும் என்று

நினைப்பில் பார்த்துப் பார்த்து உடையணிந்து கொண்டு

தன் அண்ணன் குடும்பத்துடன்

தங்கள் குடும்பமும் கிளம்பி விட்டார்கள் அதிகாலை ஐந்து மணிக்கு.. 


இதோ வந்து விட்டார்கள் அங்கே வீட்டில் தடபுடலாக

அனைத்து வேலைகள் நடந்து கொண்டிருக்க மதுமிதா

காலையில் கனவில் கண்டதையே நினைத்து வெட்கம் கொண்டவளாய் தனக்குள் சிரித்துக் கொண்டு

தன் தாயின் திட்டுகளை

காதில் வாங்காமல் மனதில் தன் காதலனாய் வரிவடிவம்

வரித்து வைத்தவனில் லயித்து அவனின் தீண்டலில் தன்னை இழந்து கன்னம் சிவக்க தன்னறையில்

இருக்க அவளின் அன்னை வந்தவள்.. 


இதென்ன இந்தக் கிறுக்கு

தன்னைப் போல் சிரித்துக் கொண்டு இருக்கிறது. ஏதாவது காதல் விவகாரம் இருக்குமோ? இப்போது கேட்டால் சிக்கல் வந்து விடும்

மாப்பிள்ளை வந்து போகட்டும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்க. 


மதிவாணன் வந்து காரில் இருந்து இறங்கும் போது

தன் மனம் கவர்ந்தவளைத் தான் தேடுகிறான்.. 


அவளோ அவனைத் தன் வீட்டுச் சன்னல் மறைவிற்குப் பின் நின்று பார்த்து விட்டாள் ஆனால் முகம் தெரியவில்லை என்று பதட்டமக

 உணர்கிறாள்.. 


அனைவரையும் வரவேற்று

உள்ளே அமர வைத்ததும் பெண்ணை அழைத்து

வருகிறார்கள்.. 


மெல்ல மெல்ல 

அடி வைத்து... 

அவளின் மேனி.. 

புது நடை பழகி.. 

புன்னகை தன் முகத்தில்

விளிம்பி நிலம் பார்த்து

வந்தவள் தென்னவன்

 முகம் பார்க்க அவளின்

விழிகள் இரண்டும்

மகிழ்ச்சியில் விழி நீர்

விழவா என்று அவளோடு

போட்டி போட்டுக் கொள்ள

அவளோ தன் கனவில் வந்தவன் இந்தக் கள்வன்

அதிகாலையில் பனிப் பொழியும் நேரம் வந்து

தன் விழியில் கலந்து

நான் கனவில் கரைந்து அவனோடு உயிரும் உறவும் கலப்பது போன கனவில்

கண்டவள் அவனே நிஜத்தில் வரவும் நினைவுகள் உறைந்து விட்டன அவளுக்கு தன் மனம் நிறைந்தவன் நெஞ்சத்தை

மஞ்சமாகத் தந்தவன்.. 


இதோ என் கண் முன்னே கை எட்டும் தூரத்தில் இருக்கிறான்

ஆனால் பேச முடியவில்லை

ஏன் என்னாச்சு என்று விழி உயர்த்தி பார்க்கிறாள்.. 

அவனோ? இவளையே பார்த்துக் கொண்டு தன் ஒற்றைக் கண்ணை அடிக்க

கனவில் கரைந்து நினைவில்

உறைகிறாள்... 


இது அனைத்தும் கனவில்

நடந்து கொண்டது என்று

தான் எங்கே இருக்கிறோம் என்று மதுமிதா பார்க்கிறாள்

தன்னவனின் நெஞ்சத்தில்

தான் மஞ்சமென துயில்

கொண்டு இருக்கிறாள்.. 

அவளோ கனவோடு நின்று இருக்க நிஜத்தில் திருமணம் முடிந்து பனிபொழியும்

இரவில் தன்னவன் நெஞ்சில்

அவனின் கை அணைவில்

இருந்து விழியில் கலந்து

மலர்கிறாள்... 


முற்றும்....  



 



Rate this content
Log in

Similar tamil story from Romance