தூவானத்தின்தூரலில் ...
தூவானத்தின்தூரலில் ...
அத்தியாயம் -1
வறண்டு விட்டதோ?
வானமும்...
இருண்டு விட்டதோ?
காலமும்....
ஏனிந்த சோதனையோ?
நித்தமும்....
பூஞ்சோலை அழகிய
கிராமம் தான்.பல
வருடங்களுக்கு முன்
ஆனால் இன்று வானம்
பொய்த்து விட்டது.விளைநிலமும்
மலடாகி விட்டது.எங்கு
பார்த்தாலும் பசுமை நிறைந்த காலம் மாறி இன்று கன்மாய்
புதர்களாய் கிணறுகள் வறண்டு மக்கள் குடி தண்ணீர்
வழி இன்றி குழாய்கள் முன்
காலிக் குடங்கள் வைத்து
கொளுத்தும் வெய்யிலில்
கால் கடுக்க நடக்கும் நிலை
பக்கத்து ஊருக்கு...
இந்த சூழ்நிலையில் பூஞ்சோலையை மீட்டு எடுக்கவே பிறந்தவனோ என்று ஊர் மக்களால் மெச்சும்
வருண் தன் படிப்பை முடித்து
தன் பூஞ்சோலை கிராமத்தில் காலடி எடுத்து வைக்கிறான்.
பூஞ்சோலை கிராமத்தில் அதிக நிலங்கள் இவர்களுடையது..
பாதி வானம் பார்த்த பூமியாக
மீதி வாய்க்கால் கிணற்றுப்
பாசனம் தான் இரண்டு ஆண்டுகள் மழை இல்லாமல்
மேகம் கருக்காமல் வான்மழை பொழியாமல், திரும்பிய
பக்கமெல்லாம் பசுஞ்சோலையாக இருந்த
பூஞ்சோலை இன்று பஞ்சசோலையாக மாறி
நிற்க நம் கதையின் நாயகன்
ஊரையும், தன் வாழ்வையும்
சாதிக்கும் லட்சியத்தோடு
இந்தக் கதையை உங்களுக்கு
கொடுக்க விளைகிறேன்.
அந்தக் காலத்திலிருந்து ஊருக்கு உழைக்கும் உத்தமர்
என்று குமரேசன் என்று
கொண்டாடப் பட்டவரின்
பேரன் இந்த வருண்
இவனின் தந்தை கந்தசாமி
அவரும் நல்லவர் தான் ஊரின் எல்லையைத் தாண்டி புழக்கம்
இல்லாதவர்...
குமரேசன் அடியே நம்ம பேரன்
வந்துட்டான் கார் வந்துருச்சு
என்று தன் மனைவி அன்னம்மாளிடம் அறிவிப்பு வெளியிட...
அதுக்கு ஏன் இப்படி தண்டோரா போடுகிறீங்க..
தாத்தா போட்ட சத்தத்தில்
வருணின் அம்மா பொற்கொடி
ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வெளியே வரும் பொழுது அந்த வீட்டின் செல்லப் பேத்தி இளமதி தன்
தாயிடம் இருந்து ஆர்த்தி தட்டை பிடுங்கி தன் அண்ணன் முன்னால் வந்து
ஆர்த்தி எடுத்து விட்டு தன்
அண்ணனிடம் வம்பு செய்யும்
எண்ணத்தில் தம்பி கொஞ்சம்
கவனிக்கிறது... என்று ஆர்த்தி
தட்டில் பணம் வேண்டும் கூறி
வருணை வீட்டுக்குள் விடாமல் வம்பு பண்ணிக் கொண்டு இருக்க...
பொற்கொடி ஏண்டி கிறுக்கி காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட உனக்கு துப்பில்லை...
அண்ணன் படிப்பை முடித்து
வருகிறான்..அவனை வீட்டுக்குள் விடாமா எதற்குடி
வம்பு பண்ணுகிற அவன் என்ன வெளி ஆளாடி என்று
காதைத் திருக வர...
இளமதிக்கு கோபம் வந்து விட்டது.அம்மா உனக்கு கொஞ்சம் கூட என் மேல் பாசம் இல்லை போம்மா என்று கூற
எது இங்கே என்னைப் பார்த்துச் சொல்லு... உன் மேல் பாசம் இல்லாமல் தான் அர்த்த சாமத்திலே எந்திரிச்சு உனக்கு ஊழியம் பண்ணுகிறானா?
பின்ன என்னமா நானு தான் தினமும் கல்லூரிக்கு போய்
வருகிறேன். ஒரு நாளாவது
எனக்கு நீ ஆர்த்தி எடுத்து இருக்கியா? அப்ப நீ செய்வது
ஓர வஞ்சனை தானே!!
ஏண்டி இங்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கல்லூரி நீ போய் வர அதுவும் காலையில் கல்லூரி பேருந்தில் போய் மாலை வருகிற அதே பேருந்தில் திரும்பி வருகிறாய்..அதற்கு உனக்கு
ஆரத்தி எடுக்கனுமாடி இது
உனக்கு ஓவராக தெரியலையாடி...
இந்த வாயாடி கூட காலையில்
யாரால ஆகும் வருண் இங்கே வா என்று பொற்கொடி கூற..
டேய் அண்ணா என்னை மீறி
நீ வீட்டில் காலடி எடுத்து வைத்து விடுவாயாடா??
அன்னமாள் பாப்பா காலையில் ஏன் வம்பு பண்ணுகிற?
அப்பன்னா உன் மருமகளை என்னை திட்ட வேண்டாம் சொல்லு அப்பத்தா...
காலையில் எந்திரிக்கனுமாம்
வாசலை தெளிச்சு கோலம் போடனுமாம் இது எல்லாம் நான் செய்யலாமா நான் யாரோட பேத்தி உன்ற பேத்தி
அப்பத்தா இந்த வேளை எல்லாம் இதோ இங்கே நிற்காரே துரை பெரிய
விவசாயப் படிப்பு படிக்க வெளி நாடு போகி படிச்ச சீமை துரை
அவனுக்கு வர பொண்டாட்டி
தான் செய்யனும்..
பொற்கொடி ஏண்டி அவனுக்கு ஒரு பொண்டாட்டி வருவதற்கு முன்னால் உனக்கு கலியாணம் பண்ணணும்.
இந்த வாயாடியை கட்ட எந்த சீமை துரை வந்து சீக்கிடிக்க போறானோ....
கந்தசாமி வந்து விட்டார்.ஏண்டி
காலையில் எம் புள்ளைய கரிச்சு கொட்டைலைனா உனக்கு பொழுது போகாதே...
இந்த வாய் பேச்சின் நடுவே
வருண் தன்னறைக்கு சென்று விடவே...அது கூட தெரியாமல் இந்த இளமதி தன் அப்பாவின்
தோளில் சாய்ந்து கொண்டு
தன் தாய் தன்னை செய்ய சொன்ன வேலைகளிலிருந்து
எப்படி தப்பித்துக் கொள்வது
என்று எப்படிங்க அப்பா நான்
உங்கள் செல்ல மகள் இந்த வீட்டின் மாகலட்சுமி என்னயைப் போய் அம்மா இந்த வேலையைச் செய்ய சொல்லுது என்று போலியாக
கண்ணைக் கசக்சி விட்டு தன் தந்தையைப் பார்க்க அவருக்கு இவளைப் பற்றி தெரியாதா என்ன....
ஏங் கண்ணு அண்ணா என்ன
பண்ணுகிறான் பார்க்கலாமாடா??
என்னது அண்ணா இங்கு இல்லையா??
என்னை ஏமாற்றி உள்ளே
போய் விடாடானா??
தன் பேத்தியை பார்த்து உனக்கு தான் உங்கப்பனை பார்த்தாலேஉலகமே மறந்துருமே ஆத்தா...
பொற்கொடி இளமதியைப்
பார்த்து வாசலிலே நின்னு
வம்பளக்காமல் வந்து வயித்துக்கு கொட்டிக் கொள்ளுடி அப்புறம் அதற்கும்
குற்றம் சொல்வாயடி..
இளமதி எனக்கு ஒன்றும் சாப்பாடு வேண்டாம் போ
உன் ஆசை மகனுக்கு அருமைப் புதல்வனுக்கே
எல்லாம் எடுத்து வை என்று கூறி விட்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டு டி.வியைப் போட்டு பார்த்துக் கொண்டு இருக்க டிபனின்
வாசம் பூரி உருளைக்கிழங்கு
மணம் வாயில் எச்சில் ஊற
யாராவது ஒருத்தர் கூப்பிடுகிறார்களா??
குதர்க்கம் பேசாமல் போய் சாப்பிட வேண்டும் என்று
நினைத்துக் கொண்டு இருக்க
தன்னை யாரோ தூக்குவது போல் இருக்க கண்ணைத் திறந்து பார்க்க தன் அண்ணன் வருண் தன் தங்கையை குண்டு கட்டாக
தூக்கிக் கொண்டு போய்
டைனிங் டேபிளில் உட்கார வைத்து தன் பிளேட்டில் இருக்கும் பூரியை எடுத்து தன் தங்கைக்கு ஊட்டி விட..
இளமதிக்கு விழியோரம் விழிநீர் விழவா என்பது போல்
இருக்க தன் அம்மாவைப் பார்க்க இங்கே என்னடி பார்வை அதான் ஊட்டரான்ல
சாப்பிடு என்று கூறி விட்டு
கண்ணு நீ சாப்பிடு இவளுக்கு
நான் ஊட்டி விடுகிறேன்.
தன் அம்மாவையே பார்த்துக் கொண்டு வாயைத் திறந்து
சமத்தாக பூரிகளைக் அடுக்கிக் கொண்டே அம்மா உன் கை மணம் இருக்கே அது யாருக்குமே இருக்காது என்று கூறி விட்டு தன் அப்பத்தாவைப் பார்த்து சிரிக்க நீ பிழைத்துக் கொள்வாய் டி....
அன்னம்மாள் தன் பேத்தியை பார்த்து சூப்பர் என்று கூறினார்...
தொடரும்....
✍️சண்முக தேவி ✍️

