anuradha nazeer

Abstract

4.4  

anuradha nazeer

Abstract

வைரஸ் தொற்று

வைரஸ் தொற்று

1 min
3.0K


பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய ஒரு இளைஞர் மூலம் இது பரவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.


பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.


அந்த மாவட்டத்தில் ராகனாத்பூர் அருகே ஒரு சிறுகிராமம் இருக்கிறது. அங்கு 900 வீடுகள் இருக்கின்றன. சுமார் 5 ஆயிரம் பேர் குடியிருந்து வருகிறார்கள். அது ஒரு ஆபத்தான கிராமமாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதுதான் அதற்கு காரணம்.


அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி ஓமன் நாட்டில் இருந்து திரும்பி வந்தார். குடும்பத்தினருடன் சகஜமாக, பழகியதுடன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம்காட்டி வந்து இருக்கிறார்.


கடந்த 4-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர்.


உடனே அவருடைய குடும்பத்தினர் அனைவரும் மருத்துவ வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அனைவருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.


அப்போது அதிர்ச்சிதரும் விதமாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த 28 பேர்களில் பெண்கள், குழந்தைகள் என 22 பேருக்கு கொரோனா வைரஸ் கொத்தாக பரவி இருப்பது கண்டறியப்பட்டது. ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய அந்த இளைஞர் மூலம்தான் அது பரவியதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.


உடனடியாக அந்தக் கிராமம் ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு கிராம மக்களை வீட்டைவிட்டு வெளியே வரவிடாமல் தடுக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு கம்பெனி ராணுவப்படையும் அங்கே நிறுத்தப்பட்டு இருக்கிறது.


மாவட்ட உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். கிராம மக்களின் நடமாட்டம் ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


சிவான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதுடன், அண்டை கிராமங்களில் மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பதும் தெரியவந்து இருக்கிறது. அதைத்தொடர்ந்து சிவான், பெகுசாரை, நவாடா ஆகிய 3 மாவட்ட எல்லைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டன.


Rate this content
Log in

Similar tamil story from Abstract